For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம்? சிஎஸ்கே இடம் என்ன?.. ஆரஞ்சு, ஊதா தொப்பி பட்டியல்

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா தொப்பி பட்டியலிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - ராஜஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 55 ரன்கள் மற்றும் துருவ் ஜுரலின் அதிரடியான 75 ரன்கள் உதவியுடன் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி, கடைசி வரை போராடியும் 20 ஓவர்களில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் இம்பேக்ட் வீரராக வந்த ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார்.

IPL 2026 Points Table Rajasthan Royals Clinch Top Spot Sameer Rizvi gets Orange Cap Bishnoi gets Purple cap

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 7வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி மோசமான நெட் ரன் ரேட் உடன் பத்தாவது இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்துள்ளது.

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ் - 2 போட்டி, 4 புள்ளி
டெல்லி கேப்பிடல்ஸ் - 2 போட்டி, 4 புள்ளி
பஞ்சாப் கிங்ஸ் - 2 போட்டி, 4 புள்ளி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 1 போட்டி, 2 புள்ளி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2 போட்டி, 2 புள்ளி
மும்பை இந்தியன்ஸ் - 2 போட்டி, 2 புள்ளி
குஜராத் டைட்டன்ஸ் - 2 போட்டி, 0 புள்ளி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 1 போட்டி, 0 புள்ளி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2 போட்டி, 0 புள்ளி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 2 போட்டி, 0 புள்ளி

அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி வசம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 160 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 113 ரன்களுடன் ரோகித் சர்மா 2வது இடத்தில் உள்ளார்.

ஆரஞ்சு தொப்பி ரேஸ்:

சமீர் ரிஸ்வி (டெல்லி) - 160 ரன்கள்
ரோகித் சர்மா (மும்பை) - 113 ரன்கள்
கூப்பர் கொனோலி (பஞ்சாப்) - 108 ரன்கள்
அங்குரிஷ் ரகுவன்ஷி (கொல்கத்தா) - 103 ரன்கள்
இஷான் கிஷன் (ஹைதராபாத்) - 94 ரன்கள்

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான ஊதா தொப்பி ரேஸில் ராஜஸ்தான் அணியின் ரவி பிஷ்னோய் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் அணியின் விஜயகுமார் வைஷாக் 5 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

ஊதா தொப்பி ரேஸ்:

ரவி பிஷ்னோய் (ராஜஸ்தான்) - 5 விக்கெட்
விஜயகுமார் வைஷாக் (பஞ்சாப்) - 5 விக்கெட்
டி நடராஜன் (டெல்லி) - 4 விக்கெட்
லுங்கி நிகிடி (டெல்லி) - 4 விக்கெட்
ஜெய்தேவ் உனத்கட் (ஹைதராபாத்) - 4 விக்கெட்

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு போனா என்ன.. நான் இருக்கேன்உங்களுக்கு.. குஜராத்தை துவம்சம் செய்த ஜுரல்சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு போனா என்ன.. நான் இருக்கேன்உங்களுக்கு.. குஜராத்தை துவம்சம் செய்த ஜுரல்

ஏப்ரல் 5 மதியம் 3:30 மணிக்கு ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும், இரவு 7:30 மணிக்கு பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோத உள்ளன. சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

Story first published: Sunday, April 5, 2026, 0:16 [IST]
Other articles published on Apr 5, 2026
English summary
IPL 2026 Points Table: Rajasthan Royals moved to the top of the IPL 2026 points table after defeating Gujarat Titans in a high-scoring thriller. While Dhruv Jurel starred with the bat, Ravi Bishnoi’s 4-wicket haul secured the win at Ahmedabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+