Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கும் ஆறுதல் பரிசு

ஐபிஎல் 2026 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அmணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்றது. இதன் மூலம் சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு இததகைய சாதனையை ஆர்சிபி படைத்தது.

ஆர்சிபி அணி வெற்றியாளர் கோப்பையுடன் ₹20 கோடி பரிசை கிடைத்துள்ளது. இரண்டாம் இடம் பெறும் குஜராத் அணிக்கு ₹13 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத பிளேஆஃப் அணிகளும் பரிசுத் தொகையுடன் திரும்புகின்றன. குவாலிஃபையர் 2-ல் GT-இடம் ஏழு விக்கெட்டில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ₹7 கோடியைப் பெறும்.

எலிமினேட்டரில் RR-இடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு ₹6.5 கோடி ஒதுக்கப்படும். 2025-ல் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி 17 வருட கோப்பைப் பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த அணி, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தை வென்று உள்ளது.

IPL 2026: விராட் கோலிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. ரஜத் பட்டிதார் மகத்தான சாதனை

IPL 2026: விராட் கோலிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. ரஜத் பட்டிதார் மகத்தான சாதனை

முன்னர் நான்கு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற RCB, 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ், 2011-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், 2016-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றிடம் தோல்வியுற்றது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற அணிகளாகும்.

IPL 2026: ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அபாரம்..கோலி அதிரடியால் வீழ்ந்த GT

IPL 2026: ஆர்சிபி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அபாரம்..கோலி அதிரடியால் வீழ்ந்த GT

இரு அணிகளும் தலா 6 முறை கோப்பையை வெல்ல, கொல்கத்தா 3 முறை வென்றுள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றியை விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யார் என்றே தெரியாத ரஜித் பட்டிதார் பெரிய சரித்திரத்தை படைத்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த முறை கோப்பையை வென்ற பிறகு நடைபெற்ற கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

Story first published: Sunday, May 31, 2026, 23:33 [IST]
Other articles published on May 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+