IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் நீங்கள் செய்தது தவறு! உடனே தண்டனை வழங்கிய பிசிசிஐ.. விதி என்ன சொல்கிறது?
சந்திகார்: ஐபிஎல் 2026 சீசனின் நான்காவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மெதுவான ஓவர் வீசியதற்காக, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் அவரது அணி இழைத்த முதல் விதிமீறல் இது.
ஐபிஎல் நடத்தை விதிகள் பிரிவு 2.22-ன் கீழ், குறைந்தபட்ச ஓவர் வீதம் தொடர்பான குற்றங்களுக்கு இது அணியின் முதல் தவறு என்பதால், ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது. இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி, ஐபிஎல் 2026 தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ், வேகப்பந்து வீச்சாளர் வைஷாக் விஜயகுமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்திய 5 விக்கெட்டுகளால் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் இலக்கைத் துரத்தி 19.1 ஓவரில் வென்றது. ஆஸ்திரேலிய இளம் வீரர் கூப்பர் கான்லி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி வழக்கம் போல் சிறப்பாக நேற்று இருந்தது. கில், பட்லர் போன்ற வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அவர்களால் அதிரடி காட்ட முடியாதபடி ஸ்ரேயாஸ் பந்துவீச்சையும், பில்டிங்கையும் மாற்றி அமைத்தார்.
பேட்டிங்கில் இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளை எதிர் கொண்டு 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து ஒன்று அவரது கையை தாக்கியது. இதனால் அவர் வழியில் துடித்தார். இதன் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் முதல் போட்டியிலே தற்போது ஸ்ரேயாஸ் அபராதம் வாங்கி இருக்கிறார். ஒரு சீசனில் இரண்டு முறை இது போல் தவறு செய்தால் அபராதம் வழங்கப்படும். மூன்றாவது முறையாக இதை தவறை செய்தால் அவர் ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இந்த சூழலில் முதல் போட்டியிலே அவர் அபராதம் வாங்கி இருப்பதால், இன்னும் அந்த தவறை அவர் இரண்டு முறை செய்து விடக்கூடாது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications