Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: தொடர்ந்து 6 போட்டியில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தோல்வி.. PBKS அபாரம்.. புள்ளி பட்டியலில் 10வது இடம்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி தோற்றுவிட்டது. இதனால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 10வது இடத்தில் உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் முதல் போட்டியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடி காட்டினார்.

சிக்ஸர், பவுண்டர் என விளாச 29 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். மறுமுனையில் ருதுராஜ் பொறுப்பாக விளையாடி 22 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். அதே போன்று கார்த்திக் சர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, சிவம் துபே உடன் சர்பராஸ்கான் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார்.

சர்பராஸ்கான் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில், ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 266 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதேபோன்று இறுதியில் சிவம் துபே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசினார். இதனால் அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்ப முதலில் இருந்து அதிரடியாக விளையாடியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமாக உள்ள நிலையில், பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட பஞ்சாப் வீரர்கள் பவுண்டரி, சிக்சர் என முதல் பந்தில் இருந்து அடிக்க தொடங்கிவிட்டனர். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

இதில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடங்கும். இதேபோன்று 34 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கோனோலி 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

ஸ்ரேயாஸ் 50 ரன்கள் ஆட்டம் இழந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி மூன்று ஓவரில் வெறும் 24 ரன்கள் தான் தேவைப்பட்டது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதில் வெற்றியை பெற்றது. சிஎஸ்கே அணியின் பௌலிங் படுமோசமாக இருப்பதால் இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்பது கேள்வி குறியாகி இருக்கிறது.

Story first published: Friday, April 3, 2026, 23:29 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+