Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஷர்துல் தாக்கூர் வைத்த ட்விஸ்ட்.. விக்கெட் போனாலும் போராடி 200 ரன் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்

தரம்சாலா: புதிய கேப்டன் பும்ரா தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தரம்சாலாவில் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். ஆரம்ப அதிரடி, மிடில் ஆர்டர் சரிவு, கடைசி நேர சரவெடி என பல அதிரடி திருப்பங்களை சந்தித்த இந்த இன்னிங்ஸில், மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் எப்படி துவம்சம் செய்தனர் என்பதை விரிவாக பார்ப்போம்.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் 22 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 32 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்து அவர் மிரட்டினார்.

IPL 2026 Punjab Kings Post Massive 200 Runs Despite Shardul Thakur s Brilliant 4-Wicket Haul

ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 1 விக்கெட் என வலுவான நிலையில் இருந்த பஞ்சாப் அணிக்கு, ஷர்துல் தாக்கூர் தனது பந்துவீச்சால் மாபெரும் நெருக்கடியை கொடுத்தார். அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (4), சூர்யான்ஷ் ஷெட்கே (8), மார்கோ ஜான்சன் (2) என 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரை உடைத்தார் ஷர்துல் தாக்கூர். நிதானமாக ஆடிய கூப்பர் கோனோலியும் 21 ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து படுமோசமாக சரிந்தது.

பஞ்சாப் அணி 160 ரன்களை தாண்டுமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அஸ்மத்துல்லா ஓமர்சாய் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 17 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய சேவியர் பார்ட்லெட் 7 பந்துகளில் 18 ரன்களும், விஷ்ணு வினோத் 8 பந்துகளில் 15 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

'எனக்கு அடிபடும்' என கதறிய 10 வயது சிறுவன்.. இழுத்துச் சென்ற தந்தை.. வைபவ் சூர்யவன்ஷியால் வந்த வினை

'எனக்கு அடிபடும்' என கதறிய 10 வயது சிறுவன்.. இழுத்துச் சென்ற தந்தை.. வைபவ் சூர்யவன்ஷியால் வந்த வினை

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். தீபக் சாஹர் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கார்பின் போஷ் மற்றும் ராஜ் பாவா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. மும்பை பந்துவீச்சாளர்கள் எக்ஸ்ட்ராவாக 13 ரன்களை தாரை வார்த்தது அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.

Story first published: Thursday, May 14, 2026, 21:34 [IST]
Other articles published on May 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+