IPL 2026: பஞ்சாப் கிங்ஸ் 254 ரன்கள் குவிப்பு.. 37 பந்தில் 93 ரன்கள் குவித்த பிரியான்ஸ் ஆர்யா
சந்திகார்: ஐபிஎல் 2026 சீசனில் 29வது லீக் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை நியூ சண்டிகர் மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச முடிவு செய்தார். தாங்கள் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி என பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். லக்னோவின் முகமது ஷமி, முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்கை கோல்டன் டக் அவுட்டில் வெளியேற்றி விரைவான அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்ப தடுமாற்றத்திற்குப்பிறகு, கூப்பர் கொனோலி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கி பஞ்சாப் இன்னிங்ஸை வலுப்படுத்தினர். இருவரும், லக்னோ பந்துவீச்சை சிதறடிக்க, ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. . ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து, விரைவாக அரைசதங்களை எட்டினர்.

குறிப்பாக, எய்டன் மார்க்ரம் வீசிய ஓவரில், கொனோலி மூன்று சிக்ஸர்களையும், ஆர்யா இரண்டு சிக்ஸர்களையும் என மொத்தமாக 32 ரன்கள் குவித்து லக்னோ பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி, பவர்ப்ளே பந்துவீச்சாளர்களில் இருந்து மீண்டு, ஒரு பெரிய ஸ்கோரை நோக்கிய வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியது.
சிறப்பான பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. கூப்பர் கொனோலி 46 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்தில் சித்தார்த் எம்மிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, சதத்தை தவறவிட்டார். சித்தார்த் எம் பந்தில் மிட்செல் மார்ஷிடம் வீழ்ந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்னில் மொஹ்சின் கானிடம், நெஹல் வதேரா 13 ரன்னில் சித்தார்த் எம்மிடம் அவுட்டாகி வெளியேறினர்.
பஞ்சாப் அணி 200 ரன்களை கடந்த நிலையில், ஷஷாங் சிங் களம் இறங்கி சித்தார்த் பந்தில் ஒரு சிக்ஸருடன் அதிரடி காட்டினார். மார்கஸ் ஸ்டோனிஸ், ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து தனது ஆக்ரோஷத்தைத் தொடர்ந்தார். ஒரு டாட் பந்துக்குப் பிறகு, நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 29 ரன்களும், நெஹல் வதேரா 7 பந்துகளில் 13 ரன்களும் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications