Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PBKS vs RR: பஞ்சாப் வெற்றி பயணம் தொடருமா? ஸ்ரேயாஸ்க்கு ஆச்சரியம் தருவாரா வைபவ் சூர்யவன்ஷி

சந்திகார்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் இன்று மிக முக்கியமான ஆட்டமாக பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் அணி இதுவரை தோல்வியை தழுவாத நிலையில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

சந்திகாரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு மேகமூட்டமாக இருந்தது.லேசாக மழை தூறியது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும் என்று நினைக்கின்றேன். இதை பயன்படுத்திக் கொண்டு எங்களுடைய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்வார்கள் என நம்புகிறேன். பஞ்சாப் அணி நிர்ணயிக்கும் இலக்கை நாங்கள் ஷேர் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெட்மேயருக்கு பதிலாக இலங்கை அணியின் சணக்கா களமிறங்குகிறார். இதேபோன்று பிஸ்னாய்க்கு பதிலாக யாஷ் குஞ்சா என்ற வீரர் சேர்க்கப்பட்டிருக்கிறார். எங்கள் அணியில் பலரும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் கடும் அழுத்தம் இருக்கின்றது.

இந்த அழுத்தம் நமது குணத்தை நிச்சயம் சோதிக்கும். யாரெல்லாம் நெருக்கடியான சூழலில் பதற்றம் அடையாமல் இருக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.

ஏனென்றால் எங்கள் அணி வீரர் ஒருவரிடம் கேட்டேன். அவர் கடந்த இரண்டு நாட்களாக ஆடுகளம் மழை காரணமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் என்னை பொருத்தவரை பந்து வீசுகிறோமோ, இல்லை பேட்டிங் செய்கிறோமோ அது எப்போதுமே நல்ல சவாலாக தான் இருக்கும். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

எங்கள் அணியில் பல வீரர்களுக்கும் பல குறிக்கோளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம். அதை நோக்கி அனைவரும் செல்கின்றோம். இதேபோன்று எங்கள் அணியின் அஸ்மதுல்லா தாய் காலமானார். அவருக்கு எங்களுடைய இடங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று ஸ்ரேயாஸ் கூறினார்.

Story first published: Tuesday, April 28, 2026, 19:20 [IST]
Other articles published on Apr 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+