Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 : விராட் கோலிக்கான இடத்தை மறுத்த அஸ்வின்.. சிறந்த 12 வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டார்

மும்பை: ஐபிஎல் 2026-க்கான சிறந்த 12 பேர் கொண்ட அணியை முன்னாள் இந்திய அணி ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின்,தேர்வு செய்துள்ளார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்டே அவரது பட்டியல் அமைந்துள்ளது.

சீசனின் சிறந்த வீரர் (MVP) விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, முதல் தொடக்க வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 16 போட்டிகளில் 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் கேப்டன் ஷுப்மன் கில், அஷ்வின் அணியின் இரண்டாவது தொடக்க வீரராக இடம்பிடித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 46 சராசரியில் 732 ரன்களையும், 163.02 ஸ்ட்ரைக் ரேட்டையும் பதிவு செய்திருந்தார்.

தொடர் முழுவதும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஜாம்பவான் விராட் கோலி, இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக (Player of the Final) தேர்வு செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். நம்பகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 56.25 சராசரியிலும் 165.84 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 675 ரன்கள் குவித்தார்.

நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் இடம்பிடித்துள்ளார். அவர் ஐபிஎல் 2026 சீசனில் 48 சராசரியுடன் 624 ரன்கள் எடுத்திருந்தார்.ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் முறையே RCB கேப்டன் ரஜத் படிதார் மற்றும் SRH ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளனர்.

படிதார் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 41.75 சராசரியில் 192.69 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 500-க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்தார். அணிக்கு பெரும் சமநிலையை வழங்கிய நிதிஷ், 14 போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட ரன்களையும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.RCB ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா அஷ்வின் அணியின் டாப் 7 வரிசையை நிறைவு செய்கிறார். அவர் 16 ஆட்டங்களில் 226 ரன்களையும், 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

அஷ்வின் தனது சிறந்த 12 பேர் கொண்ட அணியின் கடைசி நான்கு இடங்களுக்கு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளார். அதில் ஜேமி ஓவர்டன், சுனில் நரைன், மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் அடங்குவர்.சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பந்துவீச்சு நட்சத்திரமான ஓவர்டன், 10 போட்டிகளில் 18-க்கும் குறைவான சராசரியிலும் 8.89 எகானமி ரேட்டிலும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2026-ல் சுனில் நரைன் தனது வழக்கமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 22.60 சராசரியிலும் அசாதாரணமான 6.64 எகானமி ரேட்டிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடரின் அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்ந்த ககிசோ ரபாடா, தனது 29 விக்கெட்டுகள் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்குச் செல்ல உதவினார். அவர் 17 போட்டிகளில் 21.58 சராசரியை எட்டியிருந்தார்.

கடைசியாக, RCB அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை தனது 11 பேர் கொண்ட அணியில் அஷ்வின் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட இவர், 16 ஆட்டங்களில் 18-க்கும் குறைவான சராசரியிலும் 7.95 எகானமி ரேட்டிலும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சரை 'இம்பாக்ட் பிளேயராக' அஷ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். ஆர்ச்சர் 16 ஆட்டங்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

IPL 2026 சிறந்த இன்னிங்ஸ் கோலி, சூர்யவன்ஷி உடையது அல்ல.. இந்த 34 வயது வீரர் ஆடியது தான்-ஆகாஷ் சோப்ரா

IPL 2026 சிறந்த இன்னிங்ஸ் கோலி, சூர்யவன்ஷி உடையது அல்ல.. இந்த 34 வயது வீரர் ஆடியது தான்-ஆகாஷ் சோப்ரா

ரவிச்சந்திரன் அஷ்வின் தேர்வு செய்த ஐபிஎல் 2026-ன் சிறந்த 12 பேர் கொண்ட அணி: வைபவ் சூர்யவன்ஷி, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஹென்ரிச் கிளாசன், ரஜத் படிதார், நிதிஷ் குமார் ரெட்டி, க்ருனால் பாண்டியா, ஜேமி ஓவர்டன், சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ககிசோ ரபாடா. இம்பாக்ட் பிளேயர்: ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Story first published: Tuesday, June 2, 2026, 23:13 [IST]
Other articles published on Jun 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+