ஐபிஎல் 2026: இந்த வீரர் தான் மினி ஏலத்தில் ஜாக்பாட் அடிக்க போகிறார்.. அஸ்வின் கணிப்பு
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்ட்ரே ரஸில் போன்ற வீரர்கள் விலகி இருக்கிறார்கள்.
மோயின் அலி, டுபிளசிஸ் போன்ற வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரர் யார் என்பது குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் கேமரன் கிரீனை இப்போதே சிட்னி துறைமுகத்திற்கு அருகே நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்க சொல்லிவிடலாம். ஏனென்றால் தற்போது மினி ஏலத்தில் ரஸில், மேக்ஸ்வெல் உள்ளிட்ட யாரும் இல்லை. இந்த மாதிரி ஒரு சூழலில் கேமரன் கிரீன் ஏலத்தில் பங்கேற்கிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மேக்ஸ்வெல்லை பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் ஏற்கனவே போட்டுவிட்டு அவருக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். தற்போது அவர் ஏலத்தில் பங்கேற்கவில்லை என சொல்லிவிட்டார். இதனால் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அல்லது கேமரான் கிரீன் ஆகிய இருவரும் ஐபிஎல் இடத்தில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அஸ்வின் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கிரீன் விளையாட வில்லை. அதன் பிறகு 2025 ஆம் ஆண்டில் 8டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் சராசரியாக 43 ரன்கள்.169 ஸ்ட்ரைக்ரேட் வைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு சீசனிலும் ஆர்சிபி அணிக்காக கேமரன் கிரீன் பிரமாதமாக விளையாடினார்.
32 சராசரி, ஸ்ட்ரைக் கிளிக் 143 என்று அளவில் அவர் விளையாடி வந்தார். 2023 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 452 ரன்கள், 160 ஸ்ட்ரைக் ரேட் என்ற அளவில் வைத்திருந்தார். பந்து வீச்சிலும் இதுவரை 29 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் கடந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் மட்டும் 10 விக்கெட்டுகளை ஆர்சிபி அணிக்காக வீழ்த்தியுள்ளார். இதனால் கேமரான் கிரீன் எந்த அணிக்கு செல்கிறாரோ அந்த அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications