Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: வீரர்கள் தொடர்ந்து காயமடைவது ஏன்? U19 வீரர்கள் கூட விதிவிலக்கு இல்லை..அஸ்வின் சொன்ன காரணம்

சென்னை: ஐபிஎல் தொடர்களில் வீரர்கள் தொடர்ந்து காயமடைவது குறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நவீன கிரிக்கெட்டில் வீரர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான போட்டி அட்டவணைதான் இத்தகைய காயங்களுக்கு முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். பல முக்கிய வீரர்கள் ஏற்கெனவே காயங்களால் பாதிக்கப்பட்டு ,இருந்ததால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.

"இந்திய சவீரர்கள் மிக நீண்ட சீசனைச் சந்தித்து வருகின்றனர், மேலும் ஐபிஎல் போட்டி என்பது சீசனின் இறுதிக் கட்டத்தில் வருகிறது," என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கோடிட்டுக் காட்டினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ஐபிஎல் நடைபெறும் இந்த காலகட்டம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு அத்தியாவசிய ஓய்வு காலமாக இருந்தது என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

"தொடர்ச்சியாக களத்திலும் பயணத்திலும் இருக்கும் வீரர்கள் இந்தக் காலகட்டத்தில் காயம் அடைவது மிகவும் புரிந்துகொள்ளக்கூடியது தான் என்றும் அஸ்வின் விளக்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், தசைநார் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆயுஷ் போன்ற இளம் வீரர்களும் நீண்ட சீசனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை அஸ்வின் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், "வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மத்ரே போன்ற சில இளம் வீரர்கள் அண்மையில் U19 ல்கோப்பை மற்றும் U19 ஏசியன் கோப்பையில் விளையாடியுள்ளனர். அவர்களும் ஒரு நீண்ட சீசனைச் சந்தித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

"அதிகப்படியான போட்டி சுமையால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஐபிஎல் என்பது தொடர்ச்சியான பயணங்கள், இடைவெளி இல்லா போட்டிகள் கூடிய ஒரு தனித்துவமான தொடர்" என்றும் ரவிச்சந்திஇரன் அஸ்வின் தெளிவுபடுத்தினார். இதனால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் கடினமான கிரிக்கெட் தொடர் என்று அழைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு வெள்ளிகிழமை இரவு தான் பெங்களூருவில் குஜராத் அணி ஆர்சிபிக்கு எதிராக விளையாடியது. தற்போது ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் சிஎஸ்கே உடன் குஜராத் விளையாடுகிறது. இது போல் ஓய்வின்றி, கடும் வெயிலில் விளையாடும் போது, தசைப்பிடிப்பு போன்ற காயங்கள் ஏற்படுவது வழக்கம். இதை சமாளிக்க தான், ஒவ்வொரு அணியும், வீரர்கள் உடல்தகுதியை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Sunday, April 26, 2026, 13:04 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+