Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி-யை பார்த்தால் 9வது வீரராக களமிறங்குவது போல தெரியல.. கடப்பாரை அணி போல் சிஎஸ்கே இருக்கு-அஸ்வின்

ராஞ்சி: ஐபிஎல் 2026 தொடருக்கான தனது பயிற்சிகளை தோனி தொடங்கியுள்ளார். மார்ச் 2026ன் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் இத்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி 3வது பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

தோனியின் வயது, சஞ்சு சாம்சன் வருகையால், அவருடைய முக்கியத்துவம் ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணியில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 மாதம் உள்ள நிலையில், ராஞ்சியில் தோனி தனது பயிற்சிகளைத் தொடங்கினார். அவரது வலைப்பயிற்சிப் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாயின.

தனது யூடியூப் வீடியோவில் பேசிய அஷ்வின், தோனி பவர்-பிளே ஓவரில் 3வது இடத்தில் களமிறங்கி ஆதிக்கம் செலுத்துவார் என கணித்தார். "தோனி விளையாடத் தயாராக இருக்கிறார் என்பது தெரிகிறது, அவர் ஏற்கனவே பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டார். அவர் மிகச் சிறப்பாக இருக்கிறார். சிலர் இது அவரது கடைசி சீசனாக இருக்கலாம் என்றார்கள். ஆனால் இம்ரான் தாஹிரைப் பார்த்து உத்வேகம் அடைந்ததாகத் தெரிகிறது."

"அவரைப் பார்க்கும்போது அவர் 9வது இடத்தில் பேட் செய்வார் என்று தோன்றவில்லை. அவர் பயிற்சி செய்ய தொடங்கியிருக்கும் விதத்தைப் பார்த்தால் பவர்-ப்ளேயில் 3வது இடத்தில் களமிறங்கி, அதிரடியாக விளையாட போகிறார் என்று தெரிகிறது. அவர்கள் மிகச் சிறப்பாக வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, கார்த்திக் சர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோர் கொண்ட பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. கடைசி இருவரை தவிர அனுபவம் உள்ள மற்ற வீரர்களை எப்படித் தடுப்பீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்."

"200 ரன்கள் எடுத்தாலும் சிஎஸ்கேவை நிறுத்துவது கடினம். ஜேமி ஓவர்ட்டன் கூட சிறப்பாகச் செயல்படுகிறார். ஆயுஷ் மாத்ரே, U-19 உலகக் கோப்பையில் என்ன நடந்தாலும், ஐபிஎல்-லில் சிறப்பாகச் செயல்படுவார். சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையைத் தடுப்பது கடினம். சரியான கலவை மற்றும் உத்வேகம் கிடைத்தால், பந்துவீச்சாளர்களுக்கு இந்தத் தொடர் முழுவதும் மிகவும் சிரமமாக இருக்கும்," என அஷ்வின் நிறைவு செய்தார்.

ஐபிஎல் 2026 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட் (C), எம். எஸ். தோனி (WK), சஞ்சு சாம்சன் (WK), ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, உர்வில் படேல் (WK), நூர் அஹ்மத், நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், கலீல் அஹ்மத், ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி.ஜேமி ஓவர்ட்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ், அகீல் ஹுசைன், பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா (WK), மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

Story first published: Sunday, January 25, 2026, 20:51 [IST]
Other articles published on Jan 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+