Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: CSK-க்கு நடக்க போகும் நல்லது.. குறுக்கே வந்து கெடுத்துவிடும் அஸ்வின்..சாம்சனுக்கு வார்னிங்

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்குள் வந்தால் விக்கெட் கீப்பர் மற்றும் டாப் ஆர்டரில் இருக்கும் பிரச்சனை தீர்ந்து விடும். இதனை சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ள நிலையில், குறுக்கே புகுந்து அஸ்வின் இதை கெடுத்துவிடும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

R Ashwin

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சஞ்சு சாம்சன் ஒரு வேலை சிஎஸ்கே அணிக்குள் வந்தால் அவருக்கு கண்டிப்பாக கேப்டன் பதவி கிடைக்காது. ஏனென்றால் இது அவருடைய முதல் வருடமாக இருக்கும். எனவே உடனடியாக அவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்க மாட்டார்கள்.

வேண்டுமென்றால் எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆக சஞ்சு சாம்சன் வரலாம். ஆனால் இப்போதைக்கு வாய்ப்பு கிடையாது. இதன் மூலம் சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டரில் இருக்கும் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆயுஷ் மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ருதுராஜ் மூன்றாம் இடத்தில் விளையாடலாம்.

இதைதான் ருதுராஜ் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். சஞ்சு சாம்சன் வருகையின் மூலம் சிஎஸ்கே அணியில் பேலன்ஸ் கிடைக்கும். ஆனால் ஒரு மிகப்பெரிய இழப்பும் ஏற்படும். ஜடேஜாவுக்கு பதில் இன்னொரு சுழற் பந்துவீச்சாளர் இருப்பார். நடு ஓவர்களில் ஜடேஜாவின் பணியை செய்யக்கூடிய இன்னொரு வீரரை சிஎஸ்கே கண்டுபிடிக்க வேண்டும்.

இதேபோன்று ஒரு திறமை வாய்ந்த வீரரை சிஎஸ்கே அணி இழக்க நேரிடும். மேலும் பேட்டிங்கில் ஜடேஜாவுக்கு பதில் பினிஷிங் பணியை யார் செய்வார். ஆனால் ரசிகர்கள் எப்போதுமே ஜடேஜாவுக்கு நெருக்கமாகவே இருந்திருக்கிறார்கள். சிஎஸ்கே வின் மிகப்பெரிய வீரராக ஜடேஜா இருக்கின்றார். மேலும் சிஎஸ்கே அணியும் இதுவரை கடந்த காலங்களில் எந்த டிரேடிங்கும் செய்ததில்லை. ஜடஜாவை பொறுத்தவரை அவர் ராஜஸ்தான் அணிக்கு சென்றால் பல இளம் வீரர்களுடன் நல்ல உறவை அவரால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஜடஜாவை வெளியே விடுவது சிஎஸ்கேவுக்கு ஒரு மிகப்பெரிய முடிவாக தான் இருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 10, 2025, 20:38 [IST]
Other articles published on Nov 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+