IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி மழையால் தற்காலிக தடை.. 2 விக்கெட் அவுட்
கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். திட்டமிட்டபடி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இருப்பினும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது போலவே ஆட்டத்தின் இடையே மழை பெய்யத் தொடங்கியது. சரியாக 3.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையின் காரணமாகப் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாகக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் ஃபின் ஆலன் வெறும் 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனும் 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

மழை காரணமாகப் போட்டி நிறுத்தப்பட்டபோது, கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் அங்குரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் களத்தில் இருந்தனர். மைதானம் முழுவதும் கவர்கள் கொண்டு மூடப்பட்டுள்ள நிலையில், மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications