Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இந்த ஸ்கோரை கூட அடிக்க முடியலையா? லக்னோ அணியை ஓட விட்ட. ஜடேஜா, ஆர்ச்சர்.. ராஜஸ்தான் வெற்றி

லக்னோ: 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சொந்த மைதானத்திலேயே படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்தும், மற்ற முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்தியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பெரும் சோதனையாக அமைந்தது. முகமது ஷமி வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், அடுத்த பந்திலேயே துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL 2026 Rajasthan Royals Secure 40-Run Victory as LSG Collapse at Home Jadeja and Archer gave turning point

ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த ராஜஸ்தானை, அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா நங்கூரமாய் நின்று காப்பாற்றினார். அவர் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை எட்டியது. லக்னோ தரப்பில் மோஷின் கான் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ அணிக்கு ஆரம்பமே பேரிடியாக அமைந்தது. தொடக்க வீரர் ஆயுஷ் பதோனி ரன் அவுட் ஆகி வெளியேற, கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் 'டக்-அவுட்' ஆகி அதிர்ச்சி அளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 55 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவருக்குப் பின் வந்த நிக்கோலஸ் பூரன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தனது அசுர வேகத்தால் லக்னோ பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். அவர் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்குத் துணையாக நந்த்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சிலும் 1 விக்கெட் எடுத்து அசத்தினார். இறுதியில் லக்னோ அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சொந்த மைதானத்தில் மிக எளிய இலக்கைக் கூட எட்ட முடியாமல் லக்னோ அணி தோற்றது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இக்கட்டான சூழலிலும் போராடி வென்ற ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. ஜடேஜாவின் ஆல்-ரவுண்ட் ஆட்டமும், ஆர்ச்சரின் வேகமும் ராஜஸ்தானின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

Story first published: Wednesday, April 22, 2026, 23:31 [IST]
Other articles published on Apr 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+