Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: விராட் கோலிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. ரஜத் பட்டிதார் மகத்தான சாதனை

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தார். இதன் மூலம், விராட் கோலிக்குப் பிறகு, ஒரே ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 500 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேனான பட்டிதார், 2025 இல் ஆர்சிபி அணிக்கு முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆண்டு இறுதிப் போட்டியில், 500 ரன்கள் இலக்கை எட்ட அவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. வெறும் 12 பந்துகளிலேயே அவர் இந்தச் சாதனையை எட்டி, அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில், விராட் கோலியே ஆதிக்கம் செலுத்தி வருகிறார், அவர் 2016 (973 ரன்கள்), 2024 (741 ரன்கள்), 2025 (657 ரன்கள்) உட்பட ஒன்பது முறை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தச் சிறப்புமிக்கப் பட்டியலில், ராஜத் படிதார் தற்போது தன் பெயரைப் பொறித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில், 16 போட்டிகளில் 501 ரன்கள் குவித்து, கோலிக்குப் பிறகு ஆர்சிபி அணிக்காக இந்தச் சாதனையைப் படைத்த, இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். ரஜத் பட்டிதார் வந்த பிறகு ஆர்சிபி அணி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

IPL 2026: புவனேஸ்வர்குமார் மகத்தான சாதனை.. பர்பிள் தொப்பியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இழந்தார்

IPL 2026: புவனேஸ்வர்குமார் மகத்தான சாதனை.. பர்பிள் தொப்பியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இழந்தார்

எனினும் இறுதிப் போட்டியில் ரஜத் பட்டிதார் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், அவர் ஆட்டமிழந்தார். ரஷித் கான் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்த நிலையில், குர்னல் பாண்டியாவும் அதே ஓவரில் தனது விக்கெட்டை ஒரு ரன்னில் பறிகொடுத்தார். இதனால் குஜராத் ரசிகர்கள் உற்சாகமடைந்தார். ஆனால், இலக்கு மிகவும் குறைவு என்பதால் ஆர்சிபி கையே ஓங்கி இருக்கிறது.

Story first published: Sunday, May 31, 2026, 22:50 [IST]
Other articles published on May 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+