Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஜடேஜாவை வெளியே அனுப்பி தவறு செய்ததா சிஎஸ்கே? RR பயிற்சி ஆட்டத்தில் வெறித்தனம்

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பிய இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார். இடது கை வீரரான அவர், ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்ததுடன், நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார்.

முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற RR அணி, கடந்த 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய யுத்திகளுடன் களமிறங்குகிறது. 2008 இல் RR கோப்பை வென்ற அணியில் ஜடேஜா ஒருவராக இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் சிறந்து விளங்கிய பின், அவரது கம்பேக் ராஜஸ்தான் அணியின் கோப்பை கனவுகளுக்குப் பலம் சேர்க்கிறது.

RR மற்றும் CSK அணிகள் வீரர்கள் ஒப்பந்தப்படி, ஜடேஜா ஆர்ஆர் அணிக்கும்,டிT20 உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் ஐந்து முறை சாம்பியன் சென்னை அணிக்கும் மாறினர். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை வலிமையானது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, கேப்டன் ரியான் பராக், துருவ் ஜூரெல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், அதிரடி மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான் எனப் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

சாம் குர்ரன் காயத்தால் விலகியதால், இலங்கை வீரர் தசுன் ஷனாகா அவருக்குப் பதிலாக அணியில் இணைந்தார். அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, அணியின் பேலன்ஸ் சிறப்பாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். இது அணியை பிளேஆஃப்களுக்கு வழிநடத்தி, RR ஜெர்சிக்கு மீண்டும் கோப்பையை பெற்றுத் தரும் என அவர் உறுதியுடன் உள்ளார்.

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், RR தனது அணியை வலுப்படுத்த ஒன்பது வீரர்களை வாங்கியது. இதில் ஒரு பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் ஏழு பந்துவீச்சாளர்கள் அடங்குவர். தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா கலக்குவதால், அந்த அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஜடேஜாவை கைவிட்டு சிஎஸ்கே தவறு செய்து விட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RR அணியின் முழு பட்டியல்:ரியான் பராக், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் துபே, வைபவ் சூரியவன்ஷி, துருவ் ஜூரெல், டோனோவன் ஃபெரீரா, ல்ஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவி சிங், தசுன் ஷனாகா, யுத்விர் சிங் சராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, நான்ட்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, குவேனா மாபகா, குல்தீப் சென், ஆடம் மில்னே, சுஷாந்த் மிஸ்ரா, பிரிஜேஷ் சர்மா, விக்னேஷ் புதூர்.

Story first published: Friday, March 27, 2026, 17:08 [IST]
Other articles published on Mar 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+