IPL 2026: 8 ரன்களுக்கு 6 விக்கெட்! ஆச்சரியமாக தான் இருந்தது..பவுலர்களே கோப்பையை வெல்வார்கள்-ரஜத் பட்டிதார்
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒன்றை பெற்று இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற 39 வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட டெல்லி அணி, 75 ரன்கள் ஆட்டம் இழக்க, அந்த இலக்கை ஆர்சிபி அணி 6.3 ஓவர்கள் எல்லாம் எட்டி வரலாற்று வெற்றியை பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இந்த அளவுக்கு செயல்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கின்றது. ஆனால் எங்கள் பௌலர்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சிறந்த முறையில் அதுவும் பவர்பிளேவில் அபாரமாக செயல்பட்டனர். குறிப்பாக ஹேசல்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் சரியான இடத்தில் பந்துகளை வீசி பந்தை ஸ்விங் செய்தனர்.
இதை பார்க்கும்போதே பிரமிப்பாக இருந்தது. ஆனால் ஸ்பின் என்பது சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் தொடக்கத்திலே நாங்கள் விக்கெட்டுகளை எடுத்து விட்டோம். இதனால் தான் இந்த போட்டி முழுவதும் எங்களால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. நான் ஹேசல்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவருக்குமே விக்கெட்டுகள் விழுந்தால் தொடர்ந்து மூன்று ஓவர்களை கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன்.
அப்படிதான் நான் செய்தேன். முதலில் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணித்து தான் மற்ற முடிவுகளை எடுக்க வேண்டும். சுயாஷ் மற்றும் ஷெப்பர்ட் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்தது. சூர்யா தொடர்ந்து பந்துகளை வீசினார்.
அது உண்மையிலே பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பவுலர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இன்னும் நாங்கள் அதிக தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் ஒரு தருணத்திற்கு ஒரு போட்டி என்றுதான் நாங்கள் எதிர்கொள்கின்றோம். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் எங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றார்கள்.
எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான். தற்போது டி20 கிரிக்கெட்டை ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தான் நாங்கள் விளையாடுகின்றோம். அப்படி இருக்கும்போது உலகின் தலைசிறந்த பவுலர்களை வைத்திருப்பது நல்லது. சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பௌலர்களால் மட்டுமே முடியும் என ரஜத் பட்டிதார் கூறினார்.


Click it and Unblock the Notifications