IPL 2026: 6.3 ஓவரிலே வென்ற ஆர்சிபி.. 75 ரன்களில் சுருண்ட டெல்லி.. ஐபிஎல் வரலாற்றிலேயே விரைவில் முடிந்த போட்டி
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெறும் 75 ரன்களுக்கு சுருட்டிய ஆர்சிபி அதளை வெறும் 6.3 ஓவரில் எல்லாம் எட்டி சாதனை படைத்திருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனின் மிகக் குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. பெங்களூருவின் ஆக்கோரஷ பந்துவீச்சு, டெல்லி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்து, வெற்றியை எளிதாக்கியது.
முதலில் பந்துவீசத் தீர்மானித்த பெங்களூரு அணி, தொடக்கம் முதலே ஆதிக்கத்தை நிலைநாட்டியது. வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் (3/5) மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் (4/12) ஆகியோர் இணைந்த கூட்டணி, முதல் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரும் சரிவுக்கு இட்டுச் சென்றது. ரசிக் சலாம் டார் (1/21) மற்றும் சுயாஷ் சர்மா (1/7) ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்து, டெல்லி அணியின் சரிவுக்குக் காரணமாகினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணி நான்காவது ஓவரிலேயே 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அபிஷேக் போரல் 33 பந்துகளில் 30 ரன்களும், டேவிட் மில்லர் 19 ரன்களும், கைல் ஜேமிசன் 12 ரன்களும் அடித்து அணியின் மொத்த ஸ்கோரை சற்றே அதிகரிக்க உதவினர்.
ஆனாலும், அவர்களின் இந்த சிறிய போராட்டமானது, டெல்லி அணி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரிலிருந்து (2017ல் KKR-க்கு எதிராக RCB எடுத்த 49 ரன்கள்) காப்பாற்றியது. 16.3 ஓவரில் டெல்லி அணி 75 ரன்களில் சுருண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இந்த குறைந்த இலக்கை விரைவாக எட்டி, தங்களது ரன் ரேட்டை (Net Run Rate) மேலும் உயர்த்துவதில் ஆர்வம் காட்டியது.
ரன் சேஸ் தொடங்க, ஆர்சிபிக்கு இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக, சுயாஷ் சர்மாவுக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தெல் களம் கண்டார். அவர் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கினார். இந்த ஜோடி போட்டியை விரைவில் முடிக்கும் வகையில் அதிரடி காட்ட.,தொடக்க வீரர் ஜோக்கப் பெத்தேல் 11 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர், 1 பவுண்டரி அடங்கும்.
2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி, படிக்கல் ஆகியோர் பவுண்டரிகளை விரட்ட போட்டி பவர்பிளேக்குள்ளே முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6.3 ஓவர்களில் தான் போட்டி முடிந்தது. அவ்வளவு விரைவாக இந்த இலக்கை ஆர்சிபி எட்டியது. விராட் கோலி 15 பந்துகளில் 23 ரன்களும், படிக்கல் 13 பந்துகளில் 34 ரன்களும் விளாசி, ஆர்சிபிக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தனர்.


Click it and Unblock the Notifications