IPL 2026: ஆர்சிபி டிஜேயின் இனவெறி செயல்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்து இட்லி, சாம்பார் என கத்தியால் சர்ச்சை
பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் டிஜே சிஎஸ்கே அணி வீரர்களை நோக்கி இட்லி, சாம்பார், வடை என்று இனவெறியை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் உலகத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே பல வரலாற்று வெற்றிகளை பெற்றிருக்கிறது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் எப்போதுமே சிஎஸ்கே வீரர்களையும் ரசிகர்களையும் கிண்டல் செய்வது வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பலம் குன்றிய நிலையில் ஆர்சிபி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இதனால் ஆர்சிபி ரசிகர்களுக்கு வால் முளைத்துவிட்டது. இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி ஆர்சிபி ரசிகர்கள் நடந்து கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெறும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் நடப்பு சீசனில் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதன் காரணமாக ஆர்சிபி அணி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி 20 ஓவர் முடிவில் 250 ரன்கள் குவித்தது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மன உளைச்சலில் இருந்தனர். சிஎஸ்கே வீரர்களும் சோகமாக இன்னிங்ஸ் முடிவில் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றனர் அப்போது ஆர்சிபி அணியின் டிஜே, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களை பார்த்து இட்லி, தோசை, வடை சாம்பார் என்று கோஷம் எழுப்ப மைக்கில் சொன்னார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக தமிழர்களை பார்த்து அவமதிக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்கள் இட்லி, சாம்பார்,வடை என்று கிண்டல் செய்வார்கள். இது இனவெறிக்கு ஈடாகும் செயலாகும். சிஎஸ்கே அணியை கிண்டல் செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளது. ஆனால் நிறவெறியை தூண்டும் வகையில் ஆர்சிபி, டிஜே செயல்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை ஐபிஎல் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்றும் ஆர்சிபி, டிஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணி தற்போது மாற்றத்தை நோக்கி செல்வதால் இது போன்ற சூழல் சந்திக்கிறது என்றும் சிஎஸ்கே அணி மீண்டு வரும் காலம் மிக அருகிலே இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications