Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆர்சிபி அணி இந்த 2 வீரரை விடுவித்தால் போதும்.. முன்னாள் வீரர் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு மினி ஏலத்திற்கு முன்பு நடைபெற உள்ள வீரர்கள் தக்க வைக்கப்படும் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி அணி எந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும். யாரை விடுவிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஆர்சிபி அணி நன்றாக இருக்கிறது. அவர்கள் வேண்டுமானால் இரண்டு வீரர்களை விடுவிக்கலாம். அதில் ஒன்று லியாம் லிவிங்ஸ்டோன் இன்னொன்று ரஃபிக் சலாம். இது தவிர அவர்கள் வேறு யாரையும் விடுவிக்க கூடாது.

RCB

ஏனென்றால் உடையாத ஒரு விஷயத்தை ஏன் சரி செய்ய வேண்டும். ஆர் சி பி பல சாதனைகளை கடந்த சீசனில் படைத்தது. ஆர்சிபி அணி முடிந்தவரை யாரையும் விடுவிக்காமல் அனைவரையும் தக்க வைக்க வேண்டும். லியான் லிவிங்ஸ்டோனுக்கு அதிக விலை கொடுத்து ஆர் சி பி அணி வாங்கியது.

அவர் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் நடுவரிசையில் ரஜத் பட்டிதாருக்கு ஜோடியாக கூடுதல் ஒரு வீரரை கண்டுபிடிக்க வேண்டும். விராட் கோலி, ஜித்தேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் பேட்டிங் வரிசையில் இருக்கின்றனர். இதன் காரணமாக லிவிங்ஸ்டோனை விடுவித்து வேறு ஒரு நல்ல பேட்டரை வாங்குங்கள்.

பந்துவீச்சில் அந்த அணியின் புவனேஸ்வர் குமார், ஹேசல்வுட், ரொமாரியோ செபர்ட் இருக்கிறார்கள். வேண்டுமானால் தற்காப்புக்கு கூடுதலாக ஒரு இந்திய வேகப் பந்துவீச்சாளரை வாங்கலாம். ரஷீக் சலாம் 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்றார் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அவரை விடுவிப்பதால் கூடுதல் பணம் கிடைக்கும்.

இதேபோன்று குர்னல் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மாவுக்கு பலம் சேர்க்கும் விதமாக கூடுதலாக ஒரு இந்திய சுழற் பங்குச்சாளரை வாங்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எட்டு கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து லிவிங்ஸ்டோனை ஆர் சி பி வாங்கியது. ஆனால் அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு சீசனில் 8 போட்டிகள் விளையாடி மொத்தமாகவே 112 ரன்கள் தான் அடித்தார். இதில் அவருடைய சராசரி 16 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 133 என்ற அளவில் இருந்தது. மறுபுறம் ராசிக் சலாம் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 11, 2025, 23:54 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+