Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: வரும் சீசனில் பெங்களூர் ரசிகர்களுக்கு ஐபிஎல் கிடையாது.. கோலி-யை பார்க்க முடியாது.. விவரம்

பெங்களூர்: ஐபில் 2026 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி அணி புதிய நிர்வாகத்தின் கீழ் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் சி பி அணி கோப்பையை வென்ற நிலையில் அதனை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 49 பேர் உயிரிழந்தனர்.

இது மிகப்பெரிய அதிர்வலைகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆர் சி பி அணியை வேறு ஒரு நிர்வாகத்திற்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தை நிரந்தரமாக மூட அம் மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.

RCB

இதனால் எந்த வித முக்கிய போட்டிகளும் பெங்களூருவில் நடத்தப்படுவதில்லை. அண்மையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் முதலில் பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தடை காரணமாக போட்டி வேறு ஒரு நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வரும் ஐபிஎல் போட்டிகளையும் பெங்களூரில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன்படி முதல்கட்ட ஆலோசனையில் ஆர் சி பி அணி விளையாடும். அனைத்து போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடத்தப்படும் என தெரிகிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலாளர் கமலேஷ் உடன் ஆர்சிபி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலாளர் கமலேஷ், புனேவில் ஆர்சிபி போட்டிகள் நடத்த முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இன்னும் உறுதியாக வில்லை. கர்நாடகாவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆர்சிபி அணி மாற்று மைதானங்களை தேடி வருகிறது. நாங்கள் எங்கள் மைதானத்தை தர முன் வந்திருக்கின்றோம். அனைத்தும் சரியாக நடந்தால் ஆர் சி பி யின் புதிய மைதானமாக புனே விளங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இது ஆர் சி பி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி போட்டிகளை பெங்களூருவில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் புனேவில் போட்டி மாற்றப்பட்டால் அதற்கு தேவையான வீரர்களையும் ஆர் சி பி அணி நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும். இதனால் சில வீரர்கள் அணியில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, November 12, 2025, 10:18 [IST]
Other articles published on Nov 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+