Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: யாக்கர்களை சொருகிய நடராஜன்.. தடுமாறிய ஆர்சிபி.. பட்டிதார், கோலிக்கு ஃபயிலியர்

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 176 ரன்களை மட்டும் தான் இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சில் ஈடுபட்டார். ஆர்சிபி பேட்டர் விராட் கோலி, லுங்கி என்கிடியின் பந்துவீச்சில் 13 பந்துகளில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு எம்.சின்னசுவாமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், நடப்புத் தொடரில் அவருக்கு இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் தீவிரம் காட்டிய கோலி, டெல்லி வேகப்பந்து வீச்சாளர்களான ஆக்கிப் நபி மற்றும் முகேஷ் குமார் பந்துவீச்சில் சில பவுண்டரிகளை விளாசினார். பில் சால்ட் அதிரடி காட்டியதால், கோலி அவருக்குத் துணையாக நின்றார். நான்காவது ஓவரில் முகேஷ் குமார் வெறும் ஏழு ரன்களே விட்டுக் கொடுத்தார்.

அடுத்த ஓவரில் தொடக்க வீரர்கள் 18 ரன்கள் சேர்க்க, பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரன் வேகத்தை அதிகரிக்க கோலி முயற்சித்தார். அப்போது பவர்பிளேவை பயன்படுத்தி கொள்ள லுங்கி என்கிடிக்கு எதிராக களமிறங்கி அடித்த பந்து, டீப் ஃபீல்டில் பதும் நிஸ்ஸங்காவிடம் கேட்ச் ஆனது.

லுங்கி என்கிடி ஏற்கனவே 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரிலும், 2022 டி20 உலகக் கோப்பையிலும் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஏழு ரன்கள் மட்டுமே வழங்கியதன் மூலம், என்கிடி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பவர்பிளேயை சாதகமாக்கினார்.

விராட் கோலி வெளியேறிய பின்னரும் ஆர்சிபி வலுவாகவே தொடர்ந்தது.பில் சால்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி, குல்தீப் யாதவின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டு, டி.நடராஜனின் ஓவரை சாதகமாகப் பயன்படுத்தி ரன் சேர்த்தது.

படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பில் சால்ட் 38 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜத் பட்டிதார் 8 ரன்களில் ஆட்டமிழக்க, டிம் டேவிட் 26 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன் பின் ஆர்சிபி வீரர்கள் ரன் குவிக்க தடுமாறினர். குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் யாக்கர்களை தொடர்ந்து வீசி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்துள்ளது.

Story first published: Saturday, April 18, 2026, 17:48 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+