IPL 2026: ஆர்சிபி இறுதி போட்டிக்கு 5வது முறையாக தகுதி.. முதல் குவாலிபையரில் குஜராத் படுதோல்வி
தர்மசாலா: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டிக்கு ஐந்தாவது முறையாக நடப்பு சாம்பியன் ஆர்சிபி தகுதி பெற்று இருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி அணி பல பரிட்சை நடத்தியது.
ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து தவறு செய்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி அணி பட்டையை கிளப்பியது. குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஏழு பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்கள் குவிக்க நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்கள் குவித்தார்.

இதேபோன்று நடுவரிசையில் தேவுதத் படிக்கல்19 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்க்க ஆர்சிபி அணி 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை குவித்தது. இந்த சூழலில் கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் குர்ணல் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
குர்னல் பாண்டியா 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். மறுமுனையில் பட்டையைக் கிளப்பிய ரஜத் பட்டிதார் 21 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 5 சிக்சர்கள், மூன்று பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய ரஜத் பட்டிதார் ஆர்சிபி அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
16.4 ஓவர்கள் எல்லாம் ஆர்சிபி அணி 200 ரன்களை தொட்டது. எனினும் இறுதி கட்டத்திலும் அதிரடி காட்டிய ஆர்சிபி அணி ரன்களை சேர்க்க சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜத் பட்டிதார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது இமாலய சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.
இறுதியில் ஜித்தேஷ் சர்மா தன் பங்குக்கு 5 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது ஐபிஎல் பிளே ஆப் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக ஸ்கோர் இதுவாகும். குஜராத் பந்துவீச்சில் ரபடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது தொடக்க வீரர் சாய் சுதர்சன் மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டிய நிலையில் சுப்மன் கில் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 14 ரன்களில் வெளியேற நிசாந்த் சிந்து 5 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஜாஸ் பட்லர் தன் பங்கிற்கு நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 11 பந்துகள் எதிர்கொண்டு 29 ரன்கள் சேர்த்த நிலையில் போல்ட் ஆனார்.
இதனால் குஜராத் அணி 65 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இதன் பிறகு களமிறங்கிய எந்த வீரர்களும் பெரிய ஸ்கோர் சேர்க்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க குஜராத் அணியில் ராகுல் திவாட்டியா மட்டும் அதிரடியாக விளையா 43 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர், 8 பவுண்டரி அடங்கும். இதனால் குஜராத் அணி 19.3 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்று, ஐந்தாவது முறையாகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பைனலுக்கு சென்று இருக்கிறது.
சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்ற அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது. தற்போது குஜராத் அணி தோல்வியை தழுவினாலும் குவாலிஃபையர் போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதில் அந்த அணி எலிமினேட்டரில் (சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்) யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் மோதும்.


Click it and Unblock the Notifications

