Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL: மைதானத்தை விட்டே பறந்த பந்து.. 102 மீட்டர் மெகா சிக்ஸர்.. மிரள வைத்த மிட்செல் மார்ஷ்

பெங்களூர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டியில், மிட்செல் மார்ஷ் அடித்த பிரம்மாண்ட சிக்ஸர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை அவர் மைதானத்திற்கு வெளியே அனுப்பி அசத்தினார்.

பொதுவாகவே பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இங்கு ரன் மழை பொழியும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடி காட்டினார். இன்னிங்ஸின் 3-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை புவனேஷ்வர் 'ஷார்ட்' லெந்தில் வீச, அதை மார்ஷ் லாவகமாக கணித்து பலமாக சுழற்றினார்.

IPL 2026 RCB vs LSG Mitchell Marsh Smashes Massive 102-Meter Six Out of Chinnaswamy Stadium During RCB vs LSG

மார்ஷ் அடித்த அந்த 'புல்' ஷாட் டீப் மிட்-விக்கெட் திசையில் மிக உயரமாகப் பறந்தது. பந்து மைதானத்தின் மேற்கூரையைத் தாண்டி வெளியே சென்று விழுந்தது. ஒளிபரப்பாளர்கள் இதை ஆய்வு செய்தபோது, அந்த சிக்ஸர் 102 மீட்டர் தூரம் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பெங்களூரு வீரர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். மார்ஷ் அடித்த இந்த சிக்ஸர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 மெகா சிக்ஸர்களும் அடங்கும். மற்ற வீரர்கள் ரன் எடுக்கத் திணறிய வேளையில், மார்ஷ் கொடுத்த இந்தத் தொடக்கம் லக்னோ அணிக்கு ஆறுதல் அளித்தது. அதன் பின் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் இல்லாததால் இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றும், முதலில் பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்த நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெங்களூரு அணியில் ஜேக்கப் டஃபிக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். காயம் காரணமாக விராட் கோலி இம்பாக்ட் பிளேயராக பேட்டிங்கின் போது மட்டும் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டது.

அதே போல, துவக்க வீரராக வந்த விராட் கோலி அபாரமாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களும் அதிரடியாக ரன் குவிக்க, 15.1 ஓவர்களில் எல்லாம் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆர்சிபி.

Story first published: Wednesday, April 15, 2026, 22:14 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+