Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 இன்று முதல் தொடக்கம்.. எந்த சேனல், ஒடிடியில் காணலாம்.. நேரம் என்ன? RCB vs SRH இன்று மோதல்

ஐபிஎல் 2026ஆம் ஆண்டிற்கான சீசன் இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இந்தப் போட்டி பெங்களூரு எம்.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நடப்பு ஐபிஎல் சாம்பியனாக களமிறங்குகிறது. கடந்த 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் பட்டத்தை கைப்பற்றியது. அணியின் ஜாம்பவான் விராட் கோலி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இந்த சாதனைப் பயணத்திற்குப் பின்னாலும், ஆர்சிபிக்கு பல சவால்கள் இருந்தன. தனது முதல் கோப்பையைப் பெற்ற பிறகு, அணி பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், தற்போது மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் சிஎஸ்கே களமிறங்குகிறது. மறுபுறம், முன்னாள் ஐபிஎல் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் அதிரடி ரன் குவிப்பிற்குப் பெயர் பெற்ற அணியாக விளங்குகிறது. அபிஷேக் சர்மா, இஷான் கிசன், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் பட்டையை கிளப்ப உள்ளனர்.

ஐபிஎல் 2016 சீசனில் கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பின்னர் இரண்டு முறை பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டேவிட் வார்னர் தலைமையிலான ஆரஞ்சு ஆர்மி, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. கடந்தகால வெற்றியை மீண்டும் நிகழ்த்த, தற்போது ஐபிஎல்-ன் மிகவும் சக்திவாய்ந்த பேட்டிங் பிரிவுகளில் ஒன்றாக எஸ்ஆர்ஹெச் கருதப்படுகிறது.

ஆர்சிபி vs எஸ்ஆர்ஹெச்: போட்டி விவரங்கள்

ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டி மார்ச் 28, சனிக்கிழமை அன்று பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும். போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்; டாஸ் சரியாக 7:00 மணிக்கு வீசப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலமாக நேரடி ஒளிபரப்பைக் காணலாம். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஆன்லைனில் இந்தப் போட்டியைப் பார்க்க முடியும்.

ஆர்சிபி முழு அணி: ரஜத் படிதார், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஃபில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோர்டன் காக்ஸ், க்ருணால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெதெல், வெங்கடேஷ் ஐயர், சத்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் சௌஹான், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபீ, யாஷ் தயால்

எஸ்ஆர்ஹெச் முழு அணி: பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேல், கமிந்து மெண்டிஸ், ப்ரைடன் கார்ஸ், ஹர்ஷ் தூபே, அனிகேட் வர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஜெய்தேவ் உனட்கட், ஷிவம் மாவி, ஜீஷான் அன்சாரி, ஈஷான் மாலிங்கா, சகிப் ஹுசைன் மற்றும் டேவிட் பெயின்

Story first published: Saturday, March 28, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+