For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: ஆரஞ்சு சுனாமி டா.. ஆர்சிபியை கதற விடப் போகும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. ஆனா பவுலிங்?

பெங்களூர்: 2026 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 28 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொள்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவது ஆர்சிபி அணிக்குச் சாதகமாகத் தெரிந்தாலும், சன்ரைசர்ஸ் அணியின் 'ஆரஞ்சு சுனாமி' பேட்டிங் வரிசை அவர்களை நிலைகுலையச் செய்யக் காத்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பலமே அதன் அதிரடியான பேட்டிங் வரிசைதான். டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் தொடக்க ஜோடி, கடந்த சீசன்களில் பந்துவீச்சாளர்களுக்குப் சிம்ம சொப்பனமாக விளங்கியது. இவர்களுடன் இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் போன்ற அதிரடி வீரர்கள் இணைந்துள்ளதால், அந்த அணி எந்தவொரு மைதானத்திலும் 220 ரன்களுக்கு மேல் குவிக்கும் வல்லமை பெற்றுள்ளது. குறிப்பாகச் சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்பதால், ஹைதராபாத் வீரர்களின் சிக்ஸர் மழை ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்த வாய்ப்புள்ளது.

IPL 2026 RCB vs SRH Sunrisers Hyderabad Ready to Crash RCB s Party in Season Opener at Chinnaswamy

கம்மின்ஸின் தலைமை மற்றும் பந்துவீச்சு

பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் இஷான் கிஷன் தலைமையிலான ஹைதராபாத் அணி, இந்த முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த அணியில் லியம் லிவிங்ஸ்டோன் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணியின் சமநிலையை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு மீது தான் சந்தேகம் உள்ளது. அந்த அணி 250 ரன்கள் குவித்தாலும் அதை வைத்து வெற்றி பெறுமா? என்ற கேள்வி உள்ளது.

ஆர்சிபி-க்கு காத்திருக்கும் சவால்

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் பலமானவர்களாக இருந்தாலும், ஹைதராபாத் அணியின் "பயமில்லாத கிரிக்கெட்" அணுகுமுறை அவர்களைக் கடும் நெருக்கடிக்குள்ளாக்கும். கடந்த காலங்களில் ஹைதராபாத் அணி பலமுறை ஆர்சிபி-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த முறையும் அதே போன்றதொரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியுடன் கணக்கைத் தொடங்க நினைக்கும். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி மோசமாக ஆடிய நிலையில் இந்த ஆண்டு அதற்கு பதிலடியாக முதல் போட்டியிலேயே சாம்பியன் அணியை வீழ்த்த திட்டமிடும்.

IPL 2026: IPL 2026:

மார்ச் 28 (இன்று) மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டம், பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆர்சிபி-யின் கோட்டையான சின்னசாமி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொடி பறக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Saturday, March 28, 2026, 8:05 [IST]
Other articles published on Mar 28, 2026
English summary
IPL 2026 RCB vs SRH: Sunrisers Hyderabad’s explosive batting lineup, led by Travis Head and Abhishek Sharma, looks to silence the Bengaluru crowd as they face defending champions RCB on March 28.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+