Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இவங்க செய்யும் காரியத்துக்கு மைக்கை தூக்கி வீசிவிடுவேன்”.. பாண்டிங் ஆவேசம்.. என்ன நடந்தது?

ஹைதராபாத்: மைதானத்திலேயே மைக்கை வீசி எறியும் அளவுக்கு ஆவேசமாகி இருக்கிறார் ரிக்கி பாண்டிங். 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தனது அணியின் வீரர்கள் செய்த சிறுபிள்ளைத்தனமான தவறுகளால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அவர் நேரலையிலேயே தனது குமுறலை வெளிப்படுத்திய விதம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகப் பஞ்சாப் கிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு அந்த அணி கோட்டைவிட்ட 3 முக்கியமான கேட்சுகளே காரணமாக அமைந்தன. ஆட்டத்தின் 8-வது ஓவரில் இஷான் கிஷான் கொடுத்த கேட்ச்சை கூப்பர் கோனலி தவறவிட்டார். அடுத்த ஓவரிலேயே யுஸ்வேந்திர சாகல் பந்துவீச்சில் ஹென்றிச் கிளாசன் கொடுத்த வாய்ப்பை ஷஷாங்க் சிங் நழுவவிட்டார். இந்த இரண்டு வீரர்களும் பின்னர் அதிரடியாக ஆடி ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 235 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

IPL 2026 Ricky Ponting Expresses Outrage Live on Air as Catch Dropping Epidemic Costs Punjab Kings Dearly

ஆட்டத்தின் 10-வது ஓவரின் போது பாண்டிங்கிடம் நேரலையில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "உண்மையைச் சொல்லப்போனால், கேட்சுகளைத் தவறவிடுவது எங்களுக்கு ஒரு 'வைரஸ்' போலப் பரவிவிட்டது. வீரர்கள் கடுமையாகப் பயிற்சி செய்தாலும், மைதானத்தில் கேட்சுகள் அவர்களைத் துரத்தித் துரத்திச் சோதிக்கின்றன" என்று விரக்தியுடன் கூறினார். அவர் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே, லோகி பெர்குசன் மீண்டும் ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டார். இதைக் கண்ட பாண்டிங், "இன்னும் ஒரு கேட்ச்சை விட்டால், கையில் இருக்கும் மைக்கை மைதானத்திலேயே வீசி எறிந்துவிடுவேன்" என்று ஆத்திரத்தில் கத்தினார்.

புள்ளிவிவரங்களின்படி, இந்த சீசனில் மிகவும் மோசமாக ஃபீல்டிங் செய்யும் அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் வெறும் 73.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் (64.5%) மட்டுமே இவர்களை விட மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணி, தற்போது இந்தப் போட்டியில் கண்ட தோல்வியால் முதலிடத்தைப் பறிகொடுத்துள்ளது.

மேலும், ஹைதராபாத் மைதானத்தில் அந்த அணிக்கு இது தொடர்ச்சியான 9-வது தோல்வியாகும். இதற்கு முன்னதாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே-விடம் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோற்றதே மோசமான சாதனையாக இருந்தது. அதை இப்போது பஞ்சாப் முறியடித்துள்ளது. 236 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. பாண்டிங்கின் இந்த ஆவேசம் பஞ்சாப் வீரர்களை அடுத்த போட்டியில் மாற்றியமைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, May 7, 2026, 9:34 [IST]
Other articles published on May 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+