Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் கடினமான சாதனையை செய்த ரிங்கு சிங் - அனுகுல் ஜோடி!

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒருவழியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் யாருமே எளிதில் நெருங்க முடியாத ஒரு மெகா சாதனையை படைத்துள்ளது ரிங்கு சிங் - அனுகுல் ஜோடி.

கொல்கத்தாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் துல்லியமான சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 156 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

IPL 2026 Rinku Singh and Anukul Roy Create History with Record Partnership Against Rajasthan Royals

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் கொல்கத்தா அணி 85 ரன்களுக்கே 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 69 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது. அப்போதுதான் கொல்கத்தா அணியின் துணை கேப்டன் ரிங்கு சிங் - அனுகுல் ராய் ஜோடி களத்தில் இணைந்தது.

8 ரன்களில் இருந்தபோது ரிங்கு சிங்குக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு நழுவியது. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய இந்த ஜோடி, எவ்வித பதற்றமும் இன்றி மிக நேர்த்தியாக ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை குறிவைத்து அதிரடியாக ஆடிய இவர்கள், வெறும் 37 பந்துகளில் 76 ரன்கள் குவித்து, இன்னும் 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ரிங்கு சிங் 53 ரன்களுடனும், அனுகுல் ராய் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 7 வது விக்கெட் அல்லது அதற்கு கீழ் இணைந்து அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகளின் பட்டியலில் ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் ஜோடி 2 வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் இக்பால் அப்துல்லா ஜோடி குஜராத் அணிக்கு எதிராக 91 ரன்கள் சேர்த்ததே முதல் இடத்தில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப் மூலம் கொல்கத்தா அணி இந்த சீசனின் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

Story first published: Sunday, April 19, 2026, 22:34 [IST]
Other articles published on Apr 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+