IPL 2026: ரிஷப் பண்ட்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்க.. முடிவுக்கு வந்த நிதிஷ், திக்வேஸ் மோதல்
லக்னோ: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர், அப்போது லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், சக வீரர்களான நிதிஷ் ராணா மற்றும் திக்வேஷ் ராத்தி ஆகியோருக்கிடையே இருந்த நீண்டக்கால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இந்த இருவருக்கும் இடையிலான மோதல் கடந்த ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் போட்டியில் ஏற்பட்டது. அப்போது, டிக்வேஸ் ரதியின் நோட்புக் கொண்டாட்டம் ராணாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்த, மேற்கு டெல்லி லயன்ஸ் மற்றும் சௌத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரிய வாக்குவாதம் உண்டானது. ஆகவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டபோது, இந்த மோதல் மீதே அனைவரின் கண்களும் இருந்தன.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், நீண்டகாலமாக நிலவி வந்த மோதலை ரிஷப் பண்ட் முடிவுக்குக்கொண்டு வந்தார். லக்னோ எகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு முன்னதாக, ராணாவும் ரதியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன. சிறிது நேரம் பேசிய பிறகு ராத்தி நகர்ந்து செல்ல முயன்றார்.
அப்போது ராணா, ராத்தியின் தோளைத் தட்டியும், ரிஷப் பண்ட் மேலும் ஏதோ ஒரு விஷயம் பேசப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். உடனே, லக்னோ அணியின் கேப்டன் பண்ட், "நீ எங்கே போகிறாய்? எல்லாம் போதும், இனி முடிந்தது," என்று சொல்லி ராத்தியை மீண்டும் அழைத்து, ராணாவுடன் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
ராணா, ராத்தியிடம் சிரித்தபடி, "அப்படியானால் நான் உன்னுடன் அமர்ந்து பேச வேண்டியிருக்கும்," என்று கூறியதும், அங்கிருந்த சூழல் மேலும் உற்சாகமானதாக மாறியது. இந்த வெளிப்படையான உரையாடல், அவர்களுக்குள்ளான கடந்தகால மோதல் நீங்கியது.
இந்த கலகலப்பான தருணத்தைப் பார்த்த குல்தீப் யாதவும் இணைந்து கொண்டார். "போதும், இவ்வளவு அறிவுரை போதும்," என்று நகைச்சுவையாகக் கூறிய குல்தீப், பின்னர் பண்ட்டை கட்டி அணைத்தார். . இந்த சமாதான முயற்சிகளுக்குப் பிறகு, "இது இந்த இருவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான்," என்று பண்ட் வெளிப்படுத்தினார்.ரிஷப் பண்டின் இந்த செயலை பாராட்டியுள்ள ரசிகர்கள், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.


Click it and Unblock the Notifications