Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ரிஷப் பண்ட் லக்னோ கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? டாம் மூடி விளக்கம்

லக்னோ: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இது குறித்து பேசிய லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி, இந்த முடிவு எதிர்பாராதது அல்ல, ரிஷப் பண்ட் எடுத்தது சரியான முடிவுதான் என்றும், அணியின் முன்னேற்றத்திற்குத் தலைமை மாற்றம் அவசியம் என்றும் கூறி இருக்கிறார்.

தொடர் சரிவு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த சில சீசன்களாகவே எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. 2024-ம் ஆண்டில் 7-வது இடம், 2025-ம் ஆண்டில் 7-வது இடம் எனத் தடுமாறிய அந்த அணி, இந்த 2026 சீசனில் 10-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்தித்தது. 27 கோடி ரூபாய் என்ற சாதனை விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், கேப்டனாகவும் பேட்டராகவும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

IPL 2026 Rishabh Pant Steps Down as LSG Captain After Last-Place Finish Tom Moody Calls for Total Reset

டாம் மூடி விளக்கம்

ரிஷப் பண்ட்டின் இந்த முடிவு குறித்து டாம் மூடி கூறுகையில், "தற்போதைய சூழலில் கேப்டன் பதவியில் இருந்து விலகி, தனது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ரிஷப் பண்ட் உணர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகள் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும், விளையாட்டு ரீதியாகவும் சவாலாக அமைந்துள்ளன. அவர் தன்னிடம் இருந்து எதிர்பார்க்கும் தரத்தை இன்னும் எட்டவில்லை. எனவே, அவர் கேப்டன் பதவியைத் துறப்பது அவருக்கும், அணிக்கும் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். இதன் மூலம் அவர் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவார் என நம்புகிறோம்" என்றார்.

பண்ட்டின் ராஜினாமா குறித்து அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்ததா என்ற கேள்விக்கு, "நாங்கள் ஏற்கனவே இது குறித்துச் சிந்தித்து வந்தோம். கடந்த 3 சீசன்களில் அணி 7, 7 மற்றும் 10 ஆகிய இடங்களையே பிடித்துள்ளது. எனவே, அணியை முழுமையாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. நான் இந்தப் பொறுப்பிற்கு வந்து சில மாதங்களே ஆகிறது. ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்து, லக்னோ அணியை மீண்டும் ஒரு வலுவான அணியாக மாற்றுவதே எங்கள் இலக்கு" என மூடி பதிலளித்தார்.

RCB vs GT: ஐபிஎல் பைனலில் வெற்றி பெறப் போவது இந்த அணி தான்.. அம்பத்தி ராயுடு, பின்ச் கணிப்பு

RCB vs GT: ஐபிஎல் பைனலில் வெற்றி பெறப் போவது இந்த அணி தான்.. அம்பத்தி ராயுடு, பின்ச் கணிப்பு

அணியில் நீடிப்பாரா?

அடுத்த ஆண்டு ரிஷப் பண்ட் லக்னோ அணியில் நீடிப்பாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதிலை டாம் மூடி அளிக்கவில்லை. "தொடர் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதன் பிறகு நாங்கள் முழு அணியையும் ஆய்வு செய்வோம். எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடப் போகிறோம், அதற்கு யார் தேவை என்பதைப் பொறுத்தே வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார். கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள ரிஷப் பண்ட், அடுத்த சீசனில் ஒரு வீரராக லக்னோ அணியில் தொடர்வாரா அல்லது ஏலத்திற்கு வருவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Story first published: Saturday, May 30, 2026, 15:32 [IST]
Other articles published on May 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+