Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இமாலய வெற்றியை பெற்றும், முதலிடம் பிடிக்காத ஆர்சிபி..புவனேஸ்வர் குமாருக்கு கிடைத்த கவுரவம்

டெல்லி: ஐபிஎல் 2026 போட்டியில் ஆர்சிபி அணி டெல்லி கேபிடல்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தனது இடைவெளியை ஒரு புள்ளியாக ஆர்சிபி குறைத்துள்ளது. இதற்கிடையே, ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 14 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறார்.

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களிடம் திக்குமுக்காடி 16.3 ஓவர்களில் வெறும் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜாஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி அணியை நிலைகுலையச் செய்தனர்.

எளிதான 76 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. விராட் கோலி 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த 23 ரன்கள் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த வெற்றியுடன், ஆர்சிபி அணி எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன், 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவர்களின் நிகர ரன் ரேட் +1.919 ஆக உயர்ந்துள்ளது. ஏழு போட்டிகளில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி (நிகர ரன் ரேட் +1.333), ஆர்சிபி-யை விட ஒரு புள்ளியே முன்னிலையில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் தொடர்கிறது.

இந்த தோல்வியால் டெல்லி கேபிடல்ஸ் அணி ஏழாவது இடத்திலேயே நீடிக்கிறது. எட்டு போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்ற டெல்லியின் நிகர ரன் ரேட் -1.060 ஆக குறைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 5 மற்றும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி பகுதிகளில் உள்ளன.

ஐபிஎல் 2026க்கான ஆரஞ்சு கேப் பந்தயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுமான அபிஷேக் ஷர்மா முன்னிலை வகிக்கிறார். இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக், இந்தத் தொடரில் இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடி 380 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது அதிரடி ஸ்ட்ரைக் ரேட் 212.29 ஆக உள்ளது.

அபிஷேக் ஷர்மாவிற்கு அடுத்தபடியாக டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்த அவர், ஐபிஎல் 2026 தொடரில் 358 ரன்கள் எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி எட்டு போட்டிகளில் 357 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆர்சிபி அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, இந்த சீசனில் எட்டு போட்டிகளில் 351 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஹெய்ன்ரிச் கிளாசன் 349 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மன் கில் 330 ரன்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

பர்பிள் கேப் பந்தயத்தில், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், எட்டு போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், 7.61 எக்கானமி ரேட்டையும் பதிவு செய்து முன்னிலை வகிக்கிறார். சிஎஸ்கேவின் அன்ஷுல் காம்போஜ் (14 விக்கெட்டுகள், 8.56 எக்கானமி) மற்றும் எஸ்ஆர்எச்-ன் ஈஷான் மலிங்கா (14 விக்கெட்டுகள், 9.44 எக்கானமி) ஆகியோரும் அதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், புவனேஷ்வர் சிறந்த எக்கானமி ரேட் காரணமாக முதலிடத்தில் உள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோப்ரா ஆர்ச்சர் (13 விக்கெட்டுகள், எக்கானமி 8.03), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பிரின்ஸ் யாதவ் (13 விக்கெட்டுகள், எக்கானமி 8.06) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். குஜராத் டைட்டன்ஸின் ககிசோ ரபாடா 13 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா ஒன்பது விக்கெட்டுகளுடன் (எக்கானமி 8.85) பர்பிள் கேப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மல்லுக்கட்டுகின்றன. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

Story first published: Tuesday, April 28, 2026, 0:08 [IST]
Other articles published on Apr 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+