Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆர்சிபி அணி கோப்பை வென்று இவ்ளோ வெற்றிகளைப் பெறக் காரணமே இந்த 2 பேர்தான்!

பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 18 ஆண்டுகளாக கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தற்போது சாம்பியனாக உருவெடுத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்த அந்த அணி, இந்த 2026-ம் ஆன்டிலும் நடப்பு சாம்பியனாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

நட்சத்திர வீரர்கள் இருந்தும் பல ஆண்டுகளாக சறுக்கி வந்த பெங்களூரு அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி மாற்றங்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

IPL 2026 Royal Challengers Bengaluru s Dominance Andy Flower - Dinesh Karthik Duo Behind the Success

கடந்த 2024-ம் ஆண்டு பெங்களூரு அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் பொறுப்பேற்றார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஏற்கனவே சர்வதேச அளவிலான பல்வேறு டி20 தொடர்களில் அணிகளை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அனுபவம் கொண்டவர்.

பெங்களூரு அணியில் தனிநபர் ஆட்டத்தை விட, கூட்டு முயற்சிக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். வீரர்களுக்கான பொறுப்புகளை துல்லியமாக வகுத்துக் கொடுத்ததுடன், தரவுகளின் அடிப்படையில் வியூகங்களை அமைத்தார். இவரது வழிகாட்டுதலால் 2025-ம் ஆண்டு சீசனில் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு அணி அபாரமாக விளையாடியது. லீக் சுற்றில் 2-வது இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடம் சூடியது.

ஆன்டி பிளவருக்கு பக்கபலமாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். 2024 சீசனுக்கு பிறகு ஆட்டக்களத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர், உடனடியாக பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்திய ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்களின் மனநிலை குறித்து நன்கு அறிந்திருந்த கார்த்திக், பேட்டர்களுக்கு பெரும் ஊக்கமளித்தார்.

குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் நிதானத்தை இழக்காமல் விளையாடுவது குறித்து அவர் அளித்த ஆலோசனைகள் கைகொடுத்தன. இவரது பயிற்சியால் குருணால் பாண்டியா போன்ற வீரர்கள் இக்கட்டான சூழலிலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆர்சிபி அணியின் வெற்றிப் பயணத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது ஆக்ரோஷமான ஆட்டமும், களத்தில் காட்டும் ஈடுபாடும் மற்ற வீரர்களுக்கு உற்சாகம் அளித்தது. ஆன்டி பிளவர் - கார்த்திக் கூட்டணியின் முறையான திட்டமிடல் மற்றும் கோலியின் அனுபவம் ஆகியவை இணைந்து பெங்களூரு அணியை வெற்றிகரமாக மாற்றியுள்ளது.

IPL 2026: இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரங்கள்.. மிரள வைத்த 5 இளம் வீரர்கள்!

IPL 2026: இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரங்கள்.. மிரள வைத்த 5 இளம் வீரர்கள்!

2026 சீசனிலும் அதே உத்வேகத்துடன் விளையாடி வரும் பெங்களூரு அணி, மீண்டும் கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஒரு காலத்தில் தடுமாறிய அணி, இன்று மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருப்பது ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Sunday, May 24, 2026, 20:25 [IST]
Other articles published on May 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+