IPL 2026: விமர்சனம் பற்றி எல்லாம் கவலை இல்லை.. எனக்கு 2 புள்ளிகள் தான் முக்கியம்- ரியான் பராக்
ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அடைந்த தோல்விக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி வைத்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 225 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.
போட்டிக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், தற்போதைய ஸ்கோரைப் பற்றித் தான் திருப்தியடைந்ததாகக் கூறினார். இந்த மைதானத்தில் 200 ரன்கள் ஒரு சராசரி ஸ்கோர். ஆட்டம் சற்று மெதுவாகும் என எதிர்பார்த்தாலும், "மத்திய ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி, அவர்களை அவ்வளவு அதிகமாக ரன் எடுக்க விடாமல் தடுத்திருக்கலாம். ஒரே ஓவரில் பல பவுண்டரிகளை அனுமதித்து, அதுவே மீண்டும் நடந்தது. அதில் ஒரு வாய்ப்பை இழந்ததாக உணர்கிறேன்," என்று சுட்டிக்காட்டினார்.

பெரைராவை முன்னிறுத்தாத முடிவு குறித்து அவர், "ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், "இந்த பிட்ச்சில் 200 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர் என்று கருதினேன். எங்களது ஸ்கோர் 225 ரன்கள் என்பதும் சிறப்பாகவே இருந்தது. நாங்கள் நடு ஓவர்களில் சரியாக பந்து வீசவில்லை. எதிரணிக்கு அதிக பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தோம். இன்னும் 8-9 ஓவர்கள் இருந்ததால், பெர்ரெய்ராவை களமிறக்குவதற்கு முன் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பினோம், ஆனால் அந்த முடிவு பற்றி அதிகம் சிந்திப்பதற்கு இல்லை" என்றார்.
தனது காயம் பற்றிப் பேசுகையில், "அது தீவிரமானதாக இருக்காது என்று நம்புகிறேன், ஆனால் தொடையின் பின் பகுதியில் ஒரு சிறிய பாதிப்பு உள்ளது. அதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு ஒரு வார ஓய்வு இருக்கிறது, அதனால் அதை சரிசெய்துவிடுவோம்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், "எந்த விமர்சகர்களுக்கும் நான் பதிலளிக்கத் தேவையில்லை. ஆனால் இறுதியில், எனது வேலை இரண்டு புள்ளிகளைப் பெறுவதுதான். நாங்கள் போட்டியில் தோற்றால் எனது ஸ்கோரும் என்னுடைய இன்னிங்ஸும் முக்கியமில்லை," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications
