Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பெரைரா காட்டடி.. கேப்டன் பராக் பேட்டால் பதிலடி.. DC பந்துவீச்சை துவம்சம் செய்த ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 225 ரன்கள் குவித்து பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ராஜஸ்தான் அணி, எப்படி இந்த இமாலய ஸ்கோரை எட்டியது? இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை மோசமாக ஆடிய கேப்டன் ரியான் பராக்எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

சொந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சிலும், மற்றொரு வீரரான வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தத்தளித்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் மற்றும் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர்.

IPL 2026 RR vs DC Captain Riyan Parag 90 runs help Rajasthan Royals to post 225 runs Against Delhi Capitals

ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய இந்த ஜோடி, பின்னர் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க தொடங்கியது. துருவ் ஜூரெல் 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் சிக்கினார். மறுபுறம் கேப்டனுக்குரிய முழு பொறுப்புடன் களமிறங்கிய பராக், மைதானத்தில் சிக்சர் மழையாக பொழிந்தார். டெல்லி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை எல்லாம் பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்ட அவர், வெறும் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 பிரம்மாண்ட சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அசத்தினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் பராக்.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய டோனோவன் பெரைரா டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 47 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 335 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

டெல்லி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைல் ஜேமிசன், அக்சர் படேல், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டெத் ஓவர்களில் டெல்லி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக நடராஜன் 4 ஓவர்களில் 54 ரன்களையும், ஜேமிசன் 48 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட் ஏதுமின்றி 41 ரன்களை வழங்கினார்.

Story first published: Friday, May 1, 2026, 21:29 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+