Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026:அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி..மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பிய வருண் சக்கரவர்த்தி,கார்த்தி

கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 15 வயதான அவர், சுனில் நரைன் வீசிய பந்தில் சிக்ஸராக மாற்றினார். அது அவரது இரண்டாவது பந்திலேயே நிகழ்ந்தது. முன்னதாக, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் போன்ற புகழ்பெற்ற பந்துவீச்சாளர்களையும் சிக்ஸர்களுடன் அவர் எதிர்கொண்டுள்ளார்.

ஐபிஎல் 2026-ல் சூர்யவன்ஷி ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் இரண்டு அரை சதங்களுடன், 263.16 ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டிலும், ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் ஏழு இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் (206.56 ஸ்ட்ரைக் ரேட்) அடித்த அவர், 'சூப்பர் ஸ்ட்ரைக்கர்' விருதை வென்றார்.

இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வலுவான தொடக்கத்தை அளித்து, முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். சூர்யவன்ஷி 28 பந்துகளில் 46 ரன்கள் (இரண்டு சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகள்) அடித்து வருண் சக்கரவர்த்தியிடம் அவுட் ஆனார்.

இதனையடுத்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி பேட்டிங் தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பராக் 12 ரன்களிலும், ஷிம்ரன் ஹெட்மயர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா வீரர் வருண் சக்கரைவர்த்தி, கார்த்தி தியாகி லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்ததால், தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி வருகிறார். மறுபுறம், அஜிங்க்யா ரஹானேவின் KKR அணி ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளுடன் இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை. கடந்த சீசனில் இருமுறையும் ராஜஸ்தானை நைட் ரைடர்ஸ் தோற்கடித்தது.

Story first published: Sunday, April 19, 2026, 18:21 [IST]
Other articles published on Apr 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+