IPL 2026: என்ன தாண்டி ஜெய்க்க முடியுமா?ரஜத் பட்டிதார் வெறித்தனம்..ஆர்சிபி 94/6 யிலிருந்து 201 ரன்கள்
கவுஹாத்தி; 2026 ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து, சவாலான இலக்கை நிர்ணயித்தது. மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. கேப்டன் ரஜத் பட்டிதாரின் அரை சதமும், வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான பங்களிப்பும் ஆர்சிபிக்கு வலு சேர்த்தன.
ஓவர்கள் குறைக்கப்படாமல், முழு 20 ஓவர் போட்டியாக நடந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், முதல் பந்திலேயே ஃபில் சால்ட்டை டக் அவுட்டாக்கினார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிர்ச்சியான தொடக்கமாக அமைந்தது.

இருப்பினும், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். படிக்கல் 14 ரன்களில் ஆர்ச்சரால் வீழ்த்தப்பட, ஷிம்ரான் ஹெட்மையர் சிறப்பான கேட்ச் பிடித்தார். கோலி 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்த நிலையில், ரவி பிஷ்னோயின் மாயாஜால சுழலில் போல்ட் ஆனார்.
கோலி வெளியேறிய பிறகு, ஆர்சிபி அணியின் நடுவரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. க்ருனால் பாண்ட்யா (1 ரன்), ஜிதேஷ் சர்மா (5 ரன்கள்), டிம் டேவிட் (13 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரவி பிஷ்னோய் மற்றும் பிரிஜேஷ் ஷர்மா ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்தினர். ஹெட்மையர் மேலும் ஒரு அற்புதமான கேட்ச் பிடித்தார்.
இந்த சரிவுக்கு மத்தியில், ரொமாரியோ ஷெப்பர்ட் 22 ரன்கள் குவித்து, கேப்டன் ரஜத் பட்டிதாருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும், ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஷெப்பர்ட் விக்கெட்டை இழந்ததால், ஆர்சிபி அணிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 40 பந்துகளில் 63 ரன்கள் குவித்து, அற்புதமான அரை சதத்தை பதிவு செய்தார். அவரது இந்த இன்னிங்ஸ், ஆர்சிபி அணியை 150 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. அவர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் டொனோவன் ஃபெரீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், இறுதிவரை களத்தில் நின்று 29 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து, ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 201 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட வைத்தார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications