Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கோலி விக்கெட்டை வீழ்த்த ராஜஸ்தான் போட்ட பக்கா பிளான்.. செய்து முடித்த ரவி பிஷ்னோய்

கவுகாத்தி: கவுகாத்தியில் மழை காரணமாக தாமதமாக தொடங்கிய 2026 ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடியாக ஆடிய விராட் கோலி, ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரவி பிஷ்னோய் பந்துவீச்சை எதிர்கொள்வது கோலிக்கு கடினமாக இருப்பதை கவனித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திட்டமிட்டு அவரை வீழ்த்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய பிலிப் சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த தேவ்தத் படிக்கல் 7 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சிலேயே வெளியேறினார்.

IPL 2026 RR vs RCB Virat Kohli Falls to Ravi Bishnoi s Spin as RCB Struggles Against Rajasthan Royals

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் விராட் கோலி வழக்கம் போலத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்தது. அப்போது ஆட்டத்தின் 5வது ஓவரை வீச ரவி பிஷ்னோய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தை கோலி தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டிற்கும் பேடிற்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத் தகர்த்தது.

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலிக்கு ரவி பிஷ்னோய் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் பிஷ்னோய் வீசிய 44 பந்துகளைச் சந்தித்த கோலி, அதில் 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 2 முறை பிஷ்னோய் அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பிஷ்னோய்க்கு எதிராகக் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 84.1 ஆக மட்டுமே உள்ளது. இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.

கோலியின் விக்கெட்டைத் தொடர்ந்து க்ருனால் பாண்டியா 1 ரன்னில் பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜிதேஷ், டிம் டேவிட் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ரஜத் படிதார் ஸ்கோரை உயர்த்த போராடினார். ராஜஸ்தான் தரப்பில் ரவி பிஷ்னோய் 2 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் 2 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்துள்ளார். பிரிஜேஷ் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Friday, April 10, 2026, 21:58 [IST]
Other articles published on Apr 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+