Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ரிஷப் பண்ட் செய்த செயல்.. கண்கலங்கிய சஞ்சீவ் கோயங்கா.. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடைசி ஓவர் வரை அனல் பறந்தது. இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோல்வி அடைந்த போது இந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிருப்தியுடன் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உடன் சஞ்சீவ் கோயங்கா கண்கலங்கிய நிலைக்கு சென்றார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியை லக்னோ பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். குறிப்பாக முகமது ஷமி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

IPL 2026 Sanjiv Goenka Gets Emotional seeing Rishabh Pant Leads LSG to Victory Over SRH

157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். கடந்த போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறங்கி சொதப்பிய பண்ட், இந்தப் போட்டியில் தனது வழக்கமான 3-வது இடத்தில் களம் இறங்கினார். நிதானமாகத் தொடங்கிய அவர், ஆட்டம் செல்லச் செல்ல அதிரடியாக ரன் குவித்தார். 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்ட போது, ஜெய்தேவ் உனத்கட் வீசிய பந்துவீச்சில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசி 2 பந்துகள் மீதமிருக்கையிலேயே லக்னோவின் வெற்றியை உறுதி செய்தார் பண்ட். இந்த வெற்றிக்குப் பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். தனது நெஞ்சில் கையை வைத்துக்கொண்ட அவர், கண்கலங்கும் நிலைக்குச் சென்றது கேமராக்களில் பதிவானது.

போட்டி முடிந்ததும் மைதானத்திற்கு வந்த கோயங்கா, ரிஷப் பண்டை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் தோற்ற போது, மைதானத்திலேயே பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் கோயங்கா ஆவேசமாகப் பேசிய வீடியோ சர்ச்சையானது. ஆனால், தற்போது அந்த கசப்பான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள லக்னோ அணி, தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 9-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட்டின் இந்த முதிர்ச்சியான ஆட்டம் லக்னோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. அந்த அணி தொடர் வெற்றிப் பாதைக்கு மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, April 6, 2026, 6:25 [IST]
Other articles published on Apr 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+