For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே-வில் கால் வைத்தவுடன் 6 ஆண்டு கால ஐபிஎல் ரெக்கார்டு காலி.. சஞ்சு சாம்சனுக்கு நேர்ந்த கதி

கவுஹாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், சிஎஸ்கே வீரராக அறிமுகமான சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். இந்தப் போட்டியின் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக அவர் தக்கவைத்து வந்த ஒரு ஐபிஎல் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. இதை அடுத்து சிஎஸ்கே-வில் கால் வைத்தவுடன் சஞ்சு சாம்சனின் ஆட்டம் போய் விட்டது என்றும் சில ரசிகர்கள் இதை மீம்ஸ் ஆக்கி உள்ளனர்.

2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் சிஎஸ்கே-வுக்கு வந்த சஞ்சு சாம்சன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, தோனி இல்லாத சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்சன் தோனிக்குச் சரியான மாற்றாக இருப்பார் என்று கருதப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் 'தொடர் நாயகன்' விருது வென்ற கையோடு அவர் ஐபிஎல் களத்தில் இறங்கினார்.

IPL 2026 Sanju Samson Ends 6-Year IPL Opening Match Streak with Disappointing CSK Debut in 2026

ஆனால், கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 7 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, நந்ரே பர்கர் வீசிய 140.2 கி.மீ வேகப்பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

இந்தத் தோல்வியின் மூலம் சஞ்சு சாம்சனின் 6 ஆண்டு கால அரிய சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2025 வரை ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலும் சஞ்சு சாம்சன் 50 ரன்களுக்கு மேல் எடுப்பதைக் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது கடந்த 6 ஆண்டுகளின் முதல் போட்டி ஸ்கோர்கள் முறையே: 2020-ல் 74, 2021-ல் 119, 2022-ல் 55, 2023-ல் 55, 2024-ல் ஆட்டமிழக்காமல் 82 மற்றும் 2025-ல் 66 ரன்கள் ஆகும்.

தொடர்ச்சியாக 7-வது ஆண்டிலும் இந்தச் சாதனையை அவர் தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியுள்ளார். மழை காரணமாக ஆடுகளம் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட ஈரப்பதத்தை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். சஞ்சு சாம்சன் மட்டுமல்லாது மற்ற சிஎஸ்கே வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

சிஎஸ்கே-வை எப்படி காலி செய்தேன் என வாக்குமூலம் அளித்த ரவீந்திர ஜடேஜா.. கண்ணீர் வடித்த ரசிகர்கள்சிஎஸ்கே-வை எப்படி காலி செய்தேன் என வாக்குமூலம் அளித்த ரவீந்திர ஜடேஜா.. கண்ணீர் வடித்த ரசிகர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 12.1 ஓவரில் எல்லாம் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மஞ்சள் உடையில் சஞ்சுவின் முதல் போட்டி அவருக்கு ஒரு கசப்பான அனுபவமாகவே முடிந்தது.

Story first published: Monday, March 30, 2026, 23:16 [IST]
Other articles published on Mar 30, 2026
English summary
IPL 2026: Sanju Samson’s legendary streak of scoring fifties in IPL openers ended as he fell for just 6 runs on his Chennai Super Kings debut against Rajasthan Royals in Guwahati.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+