IPL 2026: சஞ்சு சாம்சன் ஒரு சென்னைக்காரர்.. CSK இந்த ஒரு விசயத்தில் மட்டும் கவனம் வைக்கனும்- கும்பளே
சாம்சனை தேர்வு செய்திருப்பதற்கு அணில் கும்ப்ளே வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தது.
இதனால் தான் சஞ்சு சாம்சனை அவர்கள் தேர்வு செய்தார்கள். சஞ்சு சாம்சன் இன்னும் இளம் வீரர் தான். அவருக்கு அதிக அளவு அனுபவமும் இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அவர் சென்னையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதனால் அவர் ஒரு சென்னைக்காரர் தான் என்றும் சொல்லலாம்.

மேலும் சிஎஸ்கே தங்கள் அணியில் உள்ள வயதான வீரர்களை ஓரங்கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தான் ஜடேஜாவை அவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பி இருக்கிறார்கள். தற்போது பதிரானா இல்லை என்பதால் சிஎஸ்கே அணி தங்களுடைய பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
தற்போது ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் சிஎஸ்கே அணியின் மிக முக்கிய வேகப்பந்துவீச்சாளராக மாறுவார். ஏற்கனவே நூர் அகமது உள்ளார். இவர்களைச் சுற்றி சிஎஸ்கே அணி பவுலர்களை வாங்க வேண்டும். குறிப்பாக ஒரு இந்திய சுழற் பந்துவீச்சாளரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஜடேஜாவை சிஎஸ்கே அணி அனுப்பியது தான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஏனென்றால் சிஎஸ்கே அணி தங்களுடைய பெரிய வீரர்களை எப்போதும் விடுவித்தது கிடையாது. அவர்கள் வீரர்களுடன் நீண்ட நெருங்கிய உறவை பேணுவார்கள். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜடேஜா மாற்றப்பட்டு இருக்கிறார். இது சிஎஸ்கே அணியை பொருத்தவரை ஒரு நல்ல முடிவு தான்.
ஒருவேலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி தருகிறோம். இங்கு வாருங்கள் என்று கூறியதாக தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் ஜெய்ஸ்வாலும் கேப்டன் பதவிக்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கின்றார். துருவ் ஜூரல் நன்றாக விளையாடுகிறார். தற்போது ஷாம்கரனும் அந்த அணிக்கு சேர்ந்து இருக்கின்றார். தற்போது ராஜஸ்தான் அணியில் ஹசரங்கா, மகேஸ் தீக்சனா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில், ஜடேஜாவும் இணைந்து இருப்பது அந்த அணியின் பலத்தை அதிகரித்து இருக்கிறது என்று கும்ப்ளே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications