Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தான்.. ஆனால் நான் யார் தெரியுமா? சஞ்சு சாம்சன் வெளிப்படை பேச்சு

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் அவர் சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறார்.

அதற்கு பதிலாக ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவர் என்ன பொறுப்பில் இருப்பார் என்று கேள்வி எழுந்தது. ஆனால் இதற்கு ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என்று சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

sanju-samson-

இந்த தருணத்தில் இது சஞ்சு சாம்சனுக்கு பிடிக்குமா? அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பல கேள்விகள் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்சு சாம்சன் இன்று சிஎஸ்கே அணி youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ருதுராஜ் என்னுடைய நல்ல நண்பர்.

நான் அவருடைய கேப்டன்சி கீழ் விளையாட ஆசைப்படுகின்றேன். கேப்டன் அவர்தான். அவருடன் இணைந்து நான் ஒரு லீடராக இருக்க விரும்புகிறேன். ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு அணியில் இடம் பிடித்திருப்பதை நான் ஒரு அதிர்ஷ்டமாக நினைக்கின்றேன்.

சிஎஸ்கே அணியில் எனக்கு பல நண்பர்கள் ஏற்கனவே இருந்தார்கள். ஆனால் ஒரு நபர் இருக்கிறார் அவருக்கு அனைவரையுமே தெரியும். அவருடைய பெயர் தோனி. நான் சிஎஸ்கே அணிக்கு வந்து விட்டதால் என்னுடைய ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு நாளை முதல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.

இன்றிலிருந்து நாம் சிஎஸ்கே அணி குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டோம். எனவே அனைவரும் மஞ்சள் ஜெர்சியை அணிந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு கோப்பையை வென்று தர தயாராக இருப்போம் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு சீசனில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தோனி இம்பேக்ட் வீரராக களம் இறங்கி வெறும் பேட்டிங் மட்டும் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, November 21, 2025, 16:15 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+