IPL 2026: டெல்லியால் முடிந்தால்,எங்களாலும் முடியும்.. 264 ரன்களை சேஸ் செய்தது பற்றி ஸ்ரேயாஸ் கருத்து
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 265 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை 7 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றிகரமாக எட்டி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 13 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையிலே எனக்கு வார்த்தையே வரவில்லை. முதலில் டெல்லியில் மதியம் விளையாடும் போது கடும் வெப்பமாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் பௌண்டரி,சிக்ஸர் என அடி வாங்கினார்கள்.

இந்த சூழலை பார்க்கும்போது நிச்சயம் அது நமது மனதை இழக்கக்கூடும். இது போன்ற சூழலில் என்ன செய்யப் போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆடுகளத்திலும் பெரிய அளவு பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. பவர் பிளேக்கு பிறகு சுழற் பந்துவீச்சாளர் வீசும்போது ஆடுகளும் பந்தை நிறுத்தி பேட்டிற்கு கொண்டு சென்றது.
ஆனால், அதில் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. ராகுல் விளையாடிய விதத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். நான் டெல்லி அணி விளையாடிய போது, எனது வீரர்களிடம் அவர்கள் எந்த இலக்கை நிர்ணயிக்கிறார்களோ, அதைப்பற்றி கவலைப்படாமல் அதைவிட கூடுதலாக ஒரு ரன் நாம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்.
எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு விளையாடுங்கள் என்று சொன்னேன். நாங்கள் நன்றாக பந்து வீசினாலும் ராகுல் பேட்டிங்கில் அதனை அபாரமாக ரன்களாக மாற்றினார். ஆனால் ராகுலின் பேட்டிங்கை பார்த்தபோது அவங்களால் முடியும் என்றால், நிச்சயம் நம்மாலும் முடியும் என்று கூறினேன்.
கடந்த போட்டிகளில் நாங்கள் இரண்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் 220 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டினோம். எனவே அந்தப் போட்டியில் நாங்கள் எந்த மனநிலையில் இருந்தோமோ, அதே மனநிலையில் தான் இன்றைய ஆட்டத்திலும் இருந்தோம். பவர் பிளேவில் முடிந்தவரை அதிக ரன்கள் குவித்து விடுங்கள் என்று நான் கூறினேன். அதனை கேட்டு எங்கள் அணி வீரர்கள் முதல் பந்தில் இருந்து அதிரடியை காட்டி எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதை பயன்படுத்திக் கொண்டு எஞ்சிய வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன்களை சேஸ் செய்தோம். நாங்கள் பெரிய அளவு எதையும் யோசிக்கவில்லை. களத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். கடந்த மூன்று நாட்களாக கடும் உழைப்பை நாங்கள் செலுத்தினோம். கடும் வெப்பத்தில் நாங்கள் பயிற்சி செய்தோம்.
தற்போது நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் உடல் வலுவை பெற்று அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். பந்துவீச்சில் மேலும் எப்படி பலம் பெற வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.


Click it and Unblock the Notifications