Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இன்று தனி உலகத்தில் இருந்தேன்.. பைனலுக்கு முன் ஓய்வில்லை.. இருந்தாலும் சாதிப்போம்- கில்

சந்திகார்: ஐபிஎல் 2026 சீசன் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதில் 15 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

இந்த வெற்றி குறித்து பேசிய சுப்மன் கில், "டாஸ் போடும் போது அங்கு சில குழப்பங்கள் நிலவின.மேட்ச் ரெஃப்ரிக்கு ரியான் பராகின் அழைப்பு சரியாக கேட்கவில்லை. எது எப்படியோ, இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது."

சாய் சுதர்சனுடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய கில்,"நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகச்சிறப்பாக ஒத்துப்போகிறோம் என்று நினைக்கிறேன். மைதானத்தில் ஒருவருடைய ஆட்டத்தை மற்றொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது, எங்களுக்குள் இருக்கும் தகவல் தொடர்பு மிக அருமையாக இருக்கும். எதிரணியின் எந்த பந்துவீச்சாளரை யார் குறிவைத்து அதிரடி காட்ட வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத் தீர்மானிப்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்."

"தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ஒரு வீரர் இப்படி ஹிட்-விக்கெட் முறையில் அவுட் ஆவதை நான் இதுவரை பார்த்ததே இல்லை, யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர் அவுட் ஆன விதம் அப்படி! சமூக ஊடகங்களில் அவரது கையில் டேப் (Tape) ஒட்டுவது போன்ற ஒரு வீடியோவை நான் பார்த்தேன், அடுத்த போட்டியில் நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ."

"நான் இன்று ஒரு தனி உலகத்தில் (Zone) இருந்ததாக உணர்கிறேன். பந்துவீச்சாளர்கள், மைதானத்தில் இருக்கும் இடைவெளிகள் (Gaps) மற்றும் பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் இருந்தது. பந்தை மிகவும் பலமாக அடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பந்து எங்கு விழுகிறது என்பதைப் பார்த்து, எனது ஏரியாவுக்குள் வரும் பந்துகளை சரியாக கணித்து ஆட மட்டுமே முயன்றேன். நீங்கள் ஃபார்மில் இருக்கும்போது இப்படித்தான் நடக்கும். உங்களுக்கு கேப்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும், அடிக்கும் அனைத்து பந்துகளும் பேட்டின் நடுப்பகுதியில் கச்சிதமாக சிக்கும்."

"நாங்கள் 220 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்தினோம். ஒரு கட்டத்தில் அவர்களை 180-190 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் பெரிய ஸ்கோரை எட்டினர். எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தவுடன், நானே போட்டியை முடித்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். ஆனால் நான் அவுட் ஆன விதம் எனக்கு சற்று வருத்தத்தை அளிக்கிறது."

"எங்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம். எங்களிடம் 6 முதல் 7 பந்துவீச்சு ஆப்ஷன்கள் இருந்ததால் இன்று சாய் சுதர்சனுக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் கடைசி வரை பேட்டிங் செய்யக்கூடிய ஆழமான வரிசையும் உள்ளது. இப்போது ஃபைனலில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படுவதே முக்கியம். இறுதிப்போட்டியிலும் எங்கள் அணி இதேபோல் அசத்தும் என்று நம்புகிறேன்."

சொந்த மைதானத்தில் இறுதிப்போட்டி ஆடுவது பற்றி பேசிய கில்,"நிச்சயமாக இது ஒரு சிறந்த உணர்வு. போட்டிகளுக்கு நடுவில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது. மிகவும் வேகமான சூழல். எனவே நாளை நாங்கள் அனைவரும் நன்றாக ஓய்வெடுத்து மீண்டு வருவோம். அதற்கு அடுத்த நாள் மைதானத்திற்குச் சென்று விக்கெட் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, வழக்கம் போல மற்றொரு கிரிக்கெட் போட்டியை விளையாடப் போகிறோம்.

அவ்வளவுதான். போட்டியின் முக்கியத்துவத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் சாதாரணமாக விளையாடினாலே, அது நம்மிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும். அதைத்தான் இந்த போட்டியிலும் பேசினோம். அழுத்தங்களை தூர எறிந்துவிட்டு ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாட நினைத்தோம். அதைச் செய்யும் வரை, ஒருவேளை வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை"என்று கில் கூறினார்.

Story first published: Saturday, May 30, 2026, 6:30 [IST]
Other articles published on May 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+