IPL 2026: சுப்மன் கில் உங்களுக்கு திருமணம் எப்போது? வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு வெட்கமடைந்த கேப்டன்
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில்லிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் தனது திருமணம் குறித்துக் கேட்ட கேள்வியால் வெட்கத்துடன் பதில் அளித்தார். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த கில்லிடம், மோரிசன் தனிப்பட்ட வாழ்வு குறித்த கேள்வியை எழுப்ப, அது அங்கிருந்தவர்களைப் புன்னகையில் ஆழ்த்திய சுவாரஸ்யமான தருணமானது.
மோரிசன் நேரடியாக, ''ஷுப்மன்ஸ், திருமண ஏற்பாடுகள் ஏதும் இல்லைதானே? எதையேனும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?” என்று கில்லிடம் கேட்டார். இதற்குப் புன்னகையுடன் பதிலளித்த கில், “இல்லை, இல்லை, அப்படி எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார். மோரிசன், “உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” எனக் கூறிவிட்டு, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் தனது கவனத்தைத் திருப்பினார்.

பொதுவாக, போட்டியின் டாஸ் அல்லது போட்டி விளக்கங்களில் இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுவது அரிது. இருப்பினும், மோரிசன் கில்லிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டிலும் அவர் கில்லிடம் இதே போன்றதொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு IPL 2025 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியபோதும், மோரிசன் கில்லிடம், “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், எதிர்காலத்தில் திருமண ஏற்பாடுகள் இல்லையா? என்ன நடக்கிறது? திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா?” என்று நேரடியாகவே கேட்டிருந்தார். இதைக்குறித்து கில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
கில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஊகங்கள் பற்றி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா இதழுக்கு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார், “நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை ஆளாகவே இருக்கிறேன். பல ஊகங்களும் வதந்திகளும் என்னை வெவ்வேறு நபர்களுடன் இணைக்கின்றன. சில சமயங்களில், நான் என் வாழ்வில் ஒருபோதும் பார்த்திராத அல்லது சந்தித்திராத ஒருவருடன் என்னைக் குறித்துப் பேசுவது மிகவும் அபத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற ஷுப்மன் கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நிஷாந்த் சிந்து தனது முதல் போட்டியில் களமிறங்கினார். கில்லின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது ஊடகங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications