Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: புதிய வேகப்பந்துவீச்சாளரை தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி? யார் இந்த ஜெரால்ட்?

ஐதராபாத்: ஐபிஎல் 2026 சீசனில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய டேவிட் பெயினுக்குப் பதிலாக அவர் களமிறங்குகிறார். இந்த முக்கிய மாற்றம் குறித்து ஹைதராபாத் அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் சீசனில் விளையாடிய டேவிட் பெயின், இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு, மீதமுள்ள சீசனில் இருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளார். இது அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி, தென்னாப்பிரிக்காவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் மொத்தம் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில், கோட்ஸி இதுவரை 14 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ₹2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா Sa டி20 தொடரில் கோட்ஸி, ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இதனால், சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் ஜெரால்டு கோட்ஸியை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஎஸ்கே அணி, அவரை எடுக்காமல் மாட் ஹென்றி மற்றும் போக்ஸை தேர்வு செய்தது. தற்போது SRH அணியில் ஜெரால்டு இணைந்துள்ளது, அந்த அணியின் வேகப்பந்துவீச்சு பலத்தை கூட்டியுள்ளது.

Story first published: Saturday, April 18, 2026, 10:22 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+