IPL 2026: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து மீண்டும் வெளியேறிய கேப்டன் பாட் கம்மின்ஸ்.. என்ன தான் நடக்கிறது?
மும்பை: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) போட்டிக்குப் பிறகு வியாழக்கிழமை முதுகுப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பினார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) மேற்பார்வையில் ஸ்கேன் நடைபெறும். அறிக்கை சாதகமாக வந்தால், ஏப்ரல் 17 அன்று அவர் மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை முதல் முதுகு வலியால் அவதிப்படும் கம்மின்ஸ், 2025-26 ஆஷஸ் சில டெஸ்ட்டுகளையும், 2026 T20 உலகக் கோப்பையையும் தவறவிட்டார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் அவர் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில், "எதுவும் தவறாகப் போகாவிட்டால், ஐபிஎல் தொடரின் பிற்பாதியிலும், SRH இறுதிப் போட்டிக்கு வந்தால் அதிலும் விளையாடுவேன்," எனக் கூறியிருந்தார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஒப்பந்த வீரர்களின் ஐபிஎல் பங்கேற்பைக் கடுமையாகக் கண்காணிக்கிறது. நீண்ட சர்வதேச சீசனுக்கு முன் புதிய காயங்களைத் தடுக்கவே இந்த முயற்சி. ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இன்னும் எந்த போட்டியிலும் ஆடவில்லை. மிட்செல் ஸ்டார்க் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியில் சேரும் முன் ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றார்.
'கேமரூன் கிரீன், கூப்பர் கொனோலி போன்றோர் ஐபிஎல்-லில் பந்துவீச CA-அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கம்மின்ஸ் இல்லாத நிலையில், SRH முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது. ஆனால், KKR-ஐ 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டது. டேவிட் பெயின், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் கொண்ட வேகப்பந்துவீச்சுப் பிரிவுக்குத் தலைமை தாங்கினர்.
பெயின் சற்று தடுமாறினாலும், உனட்கட் மற்றும் மலிங்கா தலா 7 ரன்கள் எகானமியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். SRH அணி தங்கள் அடுத்த லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த உடல்தகுதி மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிலைபாடுகளால் பல அணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications