IPL 2026: CSK வீரர் சிவம் துபேக்கு எலுமிச்சை பழம் வைத்து சூனியம் செய்த சன்ரைசர்ஸ் ரசிகர்
ஐதராபாத்: ஐபிஎல் தொடர் நாடகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் புதியதல்ல. ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய ஆட்டத்தில் , எலுமிச்சை பழத்தை வைத்து ரசிகர் ஒருவர் சூனியம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே ஆரம்பத்தில் அபாரமாக விளையாடிய நிலையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இரண்டாவது இன்னிங்ஸின் 17வது ஓவரில், 194 ரன்கள் இலக்கை துரத்திய CSK-வின் கடைசி நம்பிக்கையாக ஷிவம் தூபே இருந்தார். சாகிப் ஹுசைன் பந்துவீச வந்தபோது, ஸ்டாண்டில் ஒரு ரசிகர், எலுமிச்சையை சுழற்றி, முணுமுணுத்து, களத்தை நோக்கி சைகை காட்டும் காட்சி கேமராவில் பதிவானது. இந்த வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.

சில நொடிகளுக்குப் பிறகு, சாகிப் ஹுசைன் வீசிய அபார யோர்க்கரில் தூபே கிளீன் பௌல்ட் ஆனார். இதனால் துபே கிரீஸை விட்டு நகர முடியாமல், திணறிப் போனார். இந்த விக்கெட்டுக்குப் பின்னால் அந்த ரசிகரின் 'சூனிய சடங்கே' காரணம் என இணையத்தில் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்க, சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட், பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படி ஒரு கடிதம் எதும் எழுதப்படவில்லை. இந்த வீடியோ மற்றும் புகார் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பின. எனினும் இது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள், இது மூடநம்பிக்கை செயல் என்றும், இதனை தாங்கள் நம்பவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். சிஎஸ்கே அணி வீரர்கள் பேட்டிங் சரியாக செயல்படாமல் போனதால் தான் தோல்வியை தழுவியதாகவும், அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications