Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: முடிவுக்கு வந்த கிளாசன் ரெக்கார்ட்.. தப்பியது சூர்யகுமார் சாதனை.. நரைனுக்கு எதிராக அசத்தல்

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிக் கிளாசென், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோவ்மன் பவலின் சிறப்பான கேட்ச் அவரை வெளியேற்றியது. கிளாசென் 14 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 20 ரன்களுக்கு கீழ் அவுட்டானது இதுவே முதல் முறை.

இதன்மூலம், அவரது 13 தொடர்ச்சியான 20 ரன்களுக்கு மேல் அடித்த சாதனை முடிவுக்கு வந்தது. இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (2025-ல் 16) முதலிடத்தில் இருக்க, கிளாசென் (2025-26-ல் 13) இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

வெறும் 11 ரன்களில் அவுட்டானாலும், கிளாசென் டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை தொட்டார். 11-வது ஓவரில் கேமரூன் கிரீனிடம் விக்கெட்டை இழக்கும் முன், சுனில் நரைனுக்கு எதிராக 1000 டி20 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் ஆனார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான நரைனால் ஆட்டமிழக்காமல் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியது சிறப்பு,

ஆனால் அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வ கணக்கில் வராது.ஐபிஎல்-ல் தொடர்ச்சியாக அதிக 20+ ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 16: சூர்யகுமார் யாதவ் (2025) 13: ஹென்ரிக் கிளாசென் (2025-26) 11: ஷிகர் தவான் (2011-12) 10: ராபின் உத்தப்பா (2014) 10: பி சாய் சுதர்சன் (2023-24)

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ட் 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 15 ரன்கள் விளாசினார். இதே போன்று இசான் கிஷன் 29 பந்துகளில் 42 ரன்கள் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Story first published: Sunday, May 3, 2026, 17:42 [IST]
Other articles published on May 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+