Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜெயிக்க காரணமே இதுதான்.. ரகசியத்தை உடைத்த கேப்டன் இஷான் கிஷன்

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், ஹைதராபாத் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 48 ரன்களும் எடுத்து பவர்பிளேயில் மட்டும் 84 ரன்களை வாரிக்குவித்தனர். மிடில் ஆர்டரில் ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 39 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

IPL 2026 SRH Ishan Kishan Reveals Winning Secret as Sunrisers Hyderabad Dominate KKR at Eden Gardens

227 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 7 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து மிரட்டினாலும், அவரது விக்கெட்டை ஹர்ஷ் துபே வீழ்த்திய பின் கொல்கத்தா சரிவைச் சந்தித்தது. அங்குரிஷ் ரகுவன்ஷி 52 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கொல்கத்தா தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளையும், எஷான் மலிங்கா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன், "எனது ஆட்டத்தை விட அணியின் ஒட்டுமொத்த செயல்பாடே மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் அனைவரும் களத்தில் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. பவர்பிளேயில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கொடுத்த அதிரடி தொடக்கம்தான் ஆட்டத்தை எங்களுக்கு எளிதாக்கியது. இதனால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளத்தை புரிந்து கொள்ள கூடுதல் நேரம் கிடைத்தது. கிளாசென் மற்றும் நிதீஷ் ரெட்டியின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

மேலும் பந்துவீச்சாளர்கள் குறித்துப் பேசிய அவர், "இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷிவாங் குமார், ரிங்கு சிங்கிற்கு எதிராக காட்டிய துணிச்சலான பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் ஹர்ஷ் துபேயும் இக்கட்டான நேரத்தில் விக்கெட் எடுத்து உதவினார். இருப்பினும், பீல்டிங்கில் நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். டி20 போட்டிகளில் 10 முதல் 20 ரன்கள் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே அடுத்தடுத்த போட்டிகளில் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம்" என்றார்.

பேட்டிங்கில் 39 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Story first published: Friday, April 3, 2026, 7:25 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+