Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ரசிகர்களின் பேச்சை கேட்ட காவ்யா மாறன்.. ஸ்டார் வீரரை விடுவிக்காமல் ஸ்மார்ட் மூவ்

ஐதராபாத்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு சன்ரைஸ் அணி எட்டு வீரர்களை விடுவித்து இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணி அந்த அணியின் நட்சத்திர வீரர்களின் ஒருவரான ஹென்றிச் கிளாசனை விடுவிக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.

23 கோடி ரூபாய் கொடுத்து மெகா ஏலத்திற்கு முன்பு ஹென்றிச் கிளாஸனை சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. கடந்த ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய கிளாசன் மொத்தமாக 487 ரன்கள் குவித்திருந்தார். இதில் ஒரு சதம்,ஒரு அரை சதம் அடங்கும்.

SRH

அதற்கு முன்பு ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 479 ரன்களும், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் 448 ரன்களும்,ஹென்றிச் கிளாசனும் குவித்திருந்தார். இதனால் அந்த அணியின் முக்கிய வீரர்களாக அவர் இருக்கிறார். எனினும் 23 கோடியே என்பது கொஞ்சம் அதிகம் என்றும் இதனால் அவரை விடுவித்துவிட்டு குறைந்த விலைக்கு அவரை வாங்கலாம் என காவ்யா மாறன் முடிவு எடுத்திருந்தார்.

ஆனால் இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கிளாசனை விடுவித்தால் மற்ற அணிகள் அவருக்கு அதிக விலை கொடுத்து வாங்கி விடும் என்றும் இது தவறான முடிவு என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வீரர்களை விடுவிக்கும் பட்டியலில் ஹென்றிச் கிளாசனை காவியா மாறன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதேபோன்று ஷமியை, லக்னோ அணிக்கு அனுப்பியுள்ள காவியா மாறன், ஆடம் சாம்பா, ராகுல் சாகர் போன்ற சுழற் பந்துவீச்சாளர்களை விடுவித்து இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி தங்களுக்கு சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ராகுல் சாஹரை வாங்கிக் கொள்ள முயற்சி செய்யும்.

இதைப் போன்று பேட்ஸ்மேன்கள் ஆதரவா டைடே, சச்சின் பேபி, அபினவ் மனோகர் போன்ற மூன்று வீரர்களையும் சன்ரைசர்ஸ் அணி விடுவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது சன்ரைசர்ஸ் அணியிடம் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் கையில் இருக்கின்றது. மினி ஏலத்தில் அவர்கள் 10 வீரர்களை வாங்க வேண்டும்.

Story first published: Saturday, November 15, 2025, 19:31 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+